’அனுபவம் புதுமை, ‘பரதேசி’யில் கண்டேன்’ –வேதிகா பரவசம்

paradesi

தமிழ்கூறும் நல்லுலக ஏரியாக்களில் ‘பரதேசி’ படத்தைப் பற்றி வாயைத் திறந்தால், பாலா படப்படைந்து கடையடைப்பை நடத்திவிடுவார் என்பதை நன்றாக தெரிந்துகொண்டு, ஆந்திர இணையதளங்களில் பக்கம் பக்கமாக பேட்டி கொடுக்கிறார் நாயகி வேதிகா.

பழமொழியை ஆராயக்கூடாது அனுபவிக்கனும்’ என்பது போலவே இருந்ததாம், பாலாவுடனான ‘பரதேசி’ய அனுபவங்கள்.
‘பரதேசி’ படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது ஒரு பரவச அனுபவம்.

இந்தப் படத்தில் கமிட் ஆனபோது, ஒழுங்காக நடிக்காவிட்டால் பாலா கைநீட்டி அடிப்பார். காதை டெட்டால் ஊற்றிக் கழுவ வேண்டிய அளவுக்கு மோசமான கெட்ட வார்த்தைகளில் திட்டுவார் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

அவரிடம் அடி வாங்கினாலும் பரவாயில்லை. அவர் எதிர்பார்க்கிற நடிப்பைக் கொடுத்தால் போதும் என்று நினைத்தபடிதான் ஷூட்டிங்குக்கே கிளம்பிப் போனேன். ஆனால் அப்படி ஒரு பிரச்சினையே எழவில்லை.

பதட்டப்படுத்தாமல், மிக லாவகமாக, அவருக்கு வேண்டியதை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டார். அதனால்தான் சொல்கிறேன். பாலாவிடம் வேலை பார்த்ததை வார்த்தைகளால் விளக்கமுடியாது. அனுபவித்துப் பார்த்தால் தான் அது புரியும் ‘’ என்று ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டத்துக்குப் போகிறது வேதிகாவின் ‘பரதேசி’ அனுபவப் பேட்டி.

ஏனோ, அந்தப்பேட்டிகளில் பட நாயகன் அதர்வா குறித்து ஒரு வார்த்தை கூட மூச் விடவில்லை வேதிகா.