’75 நாட்கள், 85 ஆட்கள் ஒரு அனுஷ்கா’ – ஆச்சர்ய ஆர்யா

ஜார்ஜியாவில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு முடிந்து திரும்பிய நாளிலிருந்தே அனுதினமும் அனுஷ்கா புகழ் பாடுவதையே ஒரு பார்ட் டைம் வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஆர்யா.

‘ ஆனா இப்பிடியெல்லாம் பேசுறதுனால எனக்கும் அவங்களுக்கும் நடுவுல முடிச்சு’ எதுவும் போட்டுவச்சிடாதீங்க பாஸ்’ என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறது ஆர்யாவின் அனுஷ்காவர்த்தனம்.

‘ இதுவரைக்கும் எனக்கு ஜோடியா நடிச்சவங்கள்லயே ’தி பெஸ்ட்’ அனுஷ்காதான். ஜார்ஜியாவுல இரண்டாம் உலகத்தோட கடைசி ஷெட்யூல் 75 நாள் நான்ஸ்டாப்பா நடந்துச்சி. அடர்த்தியான காட்டுப்பகுதி. நாம நினைக்கிற எந்த சவுகர்யங்களும் கிடைக்காது. குளிர்னா உங்கவீட்டு எங்கவீட்டு குளிர் இல்லை.உயிரை உருக்குற குளிர். அனுஷ்காவைத்தவிர யூனிட் முழுக்க மொத்தம் 85 பேர். அவ்வளவும் ஆண்கள். அவங்கள்ல பலபேர் முக்கிமுனகிக்கிட்டு திரிஞ்சப்ப, ஒரு புலம்பலும் இல்லாம அத்தனையும் சமாளிச்சாங்க அனுஷ்கா. சத்தியமா வேற எந்த நடிகையா இருந்தாலும் வந்த ரெண்டாவது நாளே சுடிதாரைக்காணோம், துப்பட்டாவைக்காணோம்னு ஓட்டம் பிடிச்சிருப்பாங்க.’ என்று அனுஷ்காவின் பி.ஆர்.ஓ. ரேஞ்சுக்கு வாசித்துத்தள்ளுகிறார் ஆர்யா.

ஆர்யா,அனுஷ்கா இருவருமே டபுள் ஆக்ட் குடுத்திருக்கும்’ இரண்டாம் உலகம்’ மண்டை சூடுபிடிக்கும் ஒரு தத்துவார்த்தப் படமாக இருந்தாலும், அதில் காதல் என்ற காட்டுத்தேனை தடவி எடுத்திருக்கிறாராம் செல்வராகவன்.