கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகத் துடிக்கும் தங்கர்பச்சான்

தன் ‘அம்மாவின் கைப்பேசி’ படத்துக்கு, ஓசியில் இசையமைக்கக்கோரி ’பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே’ என்று பாடி வந்த தங்கர் பச்சானை, இசைஞானி விரட்டி அடித்ததை தங்கர்பச்சான் இன்னும் மறக்கவில்லை போலும். இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ஆடியோ வெளியீட்டுவிழாவில் ராஜா உட்பட தமிழ் இசையமைப்பாளர்கள் அனைவர் மீதும் சேற்றை இறைப்பதாக நினைத்துக்கொண்டு, தன் தலையிலேயே ‘ஆயை’ அள்ளிப்பூசிக்கொண்டார்.

இன்று காலை சத்யம் தியேட்டரில் டவுசர் பச்சானின், ‘அம்மாவின் கைப்பேசி’ ஆடியோ வெளியீட்டுவிழா நடந்தது.

படத்தை எப்படியாவது, வேந்தர் மூவீஸ் முதலாளி பாரிவேந்தர் தலையில் கட்டிவிடலாம் என்ற கனவுடன் அவரை அழைத்துச்சென்றிருந்த பச்சானுக்கு, சத்யம் தியேட்டர்க்காரர்கள், டைம் முடிந்துவிட்டது’ என்று கூறி பாவேந்தரை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் லைட் ஆஃப் பண்ணி, தங்கரின் நம்பிக்கை விளக்கையும் அணைத்தார்கள்.

சும்மாவே, கருத்தில் ‘காசி’யையும்,கபாலத்தில் ‘சேதுவையும் கொண்டு அலையும் தங்கருக்கு அவ்வளவு பெரிய அடி விழுந்தால், அவரால் நார்மலாக இருக்கமுடியுமா?

நட்டு கழண்ட நிலையில்,பிரசாத்தில் மேடையேறிய பஞ்சர்பச்சான், ‘’ஏங்க என்னங்க நடக்குது இங்க? என்று உறுமி,செறும ஆரம்பித்து சகட்டுமேனிக்கு உளறிக்கொட்டினார்.

அவர் உளறிய அவ்வளவையும் படிப்பது, உங்கள் உடல் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்.. சிறு துளி ஸாரி சிறு சளி மட்டும்உங்கள் பார்வைக்கு

கீழ்க்கண்டவற்றைப் படிக்கும்போது ‘குணா’ கமல் கண்மணி அன்போடு பாட்டுக்கு நடுவே போட்டுக்கொண்ட மாதிரி, எந்த இடத்தில் வேண்டுமானாலும், ‘’ஏங்க என்னங்க நடக்குது இங்க? வை நீங்கள் போட்டுக்கொண்டு படிக்கலாம்..

‘’ஏங்க என்னங்க நடக்குது இங்க? தமிழ்சினிமாவுல புரடியூசர்களே அழிஞ்சி போயிட்டாங்க.’ஒன்பது ரூபா நோட்டு’ ‘பள்ளிக்கூடம்’ மாதிரி இவ்வளவு தரமான படங்கள் எடுத்த எனக்கே புரடியூசருங்க கிடைக்க மாட்டேங்குறாங்க. மட்டமான மசாலா படம் எடுக்குறவங்க கிட்ட பணத்தைக்கொட்ட மட்டும்தான் இங்க ஆளுங்க இருக்காய்ங்க.

இங்க நடிகர்கள்ல எவனுமே நல்ல கதையில நடிக்க தயாராயில்லே. அதனாலதான் நானெல்லாம் நடிச்சித்தொலைக்கவேண்டியிருக்கு. ஏங்க நானெல்லாம் நடிக்கனும்ங்கிறது என் தலையெழுத்தா? இப்ப பாத்தீங்களே,என் நடிப்பை. அதுக்குப்பேரு நடிப்பாங்க? என் மூஞ்சிய ஸ்கிரீன்ல பாக்க எனக்கே சகிக்கலை. ஆனாலும் நான் நடிச்சித்தொலைக்கவேண்டியிருக்கு.

இங்க இசையமைப்பாளர்கள் யாரும் சரியில்லைங்க. காசு நிறைய கேக்குறாங்க. மியூசிக்கும் சரியிலீங்க.போட்டு நிரப்புறாங்க. பாடுறவங்க சத்தமே கேக்குறதில்ல. ஒரே இரைச்சலா இருக்கு. குரலுங்க இன்னும் கேவலம். பல சமயங்கள்ல பாடுறது ஆம்பளையா,பொம்பளையான்னு கூட தெரியலை. என்னங்க நடக்குது இங்க?

இதுக்குத்தான் மும்பையில இருந்து ரோஹித் குல்கர்ணின்னு இந்த இசையமைப்பாளரைக் கூப்பிட்டு வந்திருக்கேன். பாட்டுன்னா அது இவர் போட்டிருக்காரே, அதுதாங்க பாட்டு. ரீ-ரெகார்டிங்னா என்னன்னு’ அம்மாவின் கைப்பேசி’ பாத்துதாங்க நானே தெரிஞ்சிக்கிட்டேன். அந்த வகையில இதுதாங்க என்னோட உருப்படியான முதல்படம்னு சொல்வேன்’’

இப்படியே தங்கரின் உளறல்கள் உச்சக்கட்டத்தை எட்டவே, ‘என்னப்பா இந்த ஆளு இவ்வளவு சீக்கிரமே இப்படி ஆயிட்டாரு. கீழ்ப்பாக்கத்துல பெட் வேகன்ஸி இருக்கான்னு தெரியலையே’ என்று உச்சு கொட்டியபடியே, நடையைக்கட்ட ஆரம்பித்தனர் பத்திரிகையாளர்கள்.