கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எங்க ஊரு ராமநாராயணன் சாரு கிளம்பி வர்றாரு,

‘தாண்டவத்தின் படுதோல்வியில் துவண்டுபோயிருந்த அனுஷ்காவுக்கு ஆயிரம் வோல்டேஜ் புத்துணர்ச்சி ஏற்றியிருக்கிறார் இயக்குனர் குணசேகர்.

தெலுங்கு இண்டஸ்ட்ரியின் அத்தனை ரெகார்டுகளையும் அடித்து நொறுக்கிய ‘ஒகுடு’ [தமிழில் ‘கில்லி’] மற்றும் சிறந்த படத்துக்கான தேசிய விருது வாங்கிய ‘ராமாயணம்’ படத்தை இயக்கிய குணசேகர், ஒரு சிறிய ஓய்வுக்குப்பின், 60 கோடி பட்ஜெட்டுடன் ஒரு சரித்திரக்கதையை இயக்கவருகிறார்.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகவிருக்கும்,இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்துக்கு தோட்டாதரணி அரங்கம் அமைக்க, நம்ம இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

‘’ எனது ஆறுவருட உழைப்பில் உருவாகும் இந்தப்படம் என் நீண்ட கால கனவு. ராணி ருத்ரம்மா தேவி பாத்திரத்தை நான் எழுத ஆரம்பித்தபோதே, இதில் நடிக்க அனுஷ்காவை விட்டால் வேறு சரியான நடிகை இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆண் துணையற்ற ருத்ரம்மா தேவியை, அவரது உறவினர்கள் எப்படி நயவஞ்சகம் செய்கிறார்கள். அவர்களை ருத்ரம்மா சூழ்ச்சிகரமாக எவ்விதம் எதிர்கொண்டார் என்கிற எளிமையான கதையை, இதுவரை இந்திய சினிமா காணாத பிரம்மாண்டமாக உருவாக்க முடிவுசெய்திருக்கிறேன்.

புராதன காலத்து இசைக்கருவிகளைக்கொண்டு, இசைஞானி இசைக்கப்போகும் பாடல்களும், பின்னணி இசையும் எனது படத்தின் ஆத்மாவாக இருக்கும்’ என்கிறார் குணசேகர்.

இந்த நியூஸ் படிச்ச ரெண்டாவது நிமிஷம், தமிழ் ரைட்ஸை வாங்குறதுக்காக, எங்க ஊரு ராமநாராயணன் சாரு கிளம்பி வருவாரு, அட்வான்ஸை வாங்கிப்போடுங்க சார்.