’நாங்களும் படம் எடுப்போம்’ -ஸ்ருதியை சுற்றி வளைத்த பாம்புகள்

நாம 500 கோடி பட்ஜெட்ல கூட படம் எடுக்கலாம். ஆனா நயா பைசா செலவழிக்காம படம் எடுக்குற பாம்புக்கு முன்னாடி எம்மாத்திரம்?

இப்ப என்னாத்துக்கு இந்த பழைய தத்துவம் என்று நீங்கள் டென்சனாவது புரிகிறது.

ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு, நம்ம ஸ்ருதிஹாஸனுக்கு, புனே அருகே நடந்த பயங்கரமான சம்பவத்தைக் கேட்டால் வெலவெலத்துப்போய், இதைவிட பெரிய தத்துவமெல்லாம் எடுத்து விடுவீர்கள்.

தற்போது பிரபுதேவா இயக்கத்தில், ‘நுவ்வொஸ்தானண்டே நானொத்தேண்டனா’ தெலுங்குப் படத்தின் இந்தி ரிமேக்கில் நடித்துவரும் ஸ்ருதிக்கு, இரு தினங்களுக்கு முன்பு, புனே நகருக்கு ஏழெட்டு கிலோமீட்டர் வெளியே ஒரு லொகேஷன் சொல்லப்பட்டது.

காலையில் அனைவரும் அசெம்பிள் ஆகி,டிபன் சாப்பிட்டு, மேக்கப் போட்டு, ரிகர்ஷல் பாத்து, ஆல் லைட்ஸ் ஆன் பண்ணி, ஷூட்டிங் துவங்கப்போகும் வேலையில், சற்று துரத்திலிருந்து பல தினுஷுகளில் ‘ஸ் ஸ் ‘ சத்தங்களாம்.

நல்லவேளையாக, இதற்குள் ஓடிவந்த பக்கத்து கிராம வாசிகள், ‘ஏங்க நிறைய பாம்புங்க படம் எடுக்குற இடம் இதுங்க. எடுக்குற படம் நல்லபடியா ரிலீஸாகனுமுன்னு நினைச்சீங்கன்னா, இவிங்களோட போட்டி போடாம வேற எடத்துல போயி படம் எடுங்க’’ என்றவுடன், பிரபுதேவா பதறிப்போய் ‘பேக்-அப்’ சொல்ல, யூனிட் மொத்தமும் கேமராவைக்காணோம், லைட்டைக்காணோம்’ என்று ஓட்டம் பிடித்தார்களாம்.

ஏம்பா, லொகேஷன் மேனேஜர்ஸ் தண்டச்சோத்து தடிராமன்களா, இதையெல்லாம் முன்கூட்டி விசாரிச்சி வைக்க மாட்டீங்களா? அவிங்க படம் எடுக்குற எடத்துல, நாம படம் மட்டுமில்ல, ஸ்டில்லு கூட எடுக்கக் கூடாதுப்பா.