’இந்த விஜய் படத்திலிருந்து வெளியேற்றப்படுகிறாரா அந்த விஜய்?’

பார்க்க படு சாது போல காட்சியளிக்கும் இயக்குனர் விஜயைச் சுற்றித்தான் எவ்வளவு கண்ட்ரவர்சிகள்? ‘தாண்டவம்’ பஞ்சாயத்து முடிந்து, விஜய் படத்துக்கு முந்தி நெக்ஸ்ட் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று இருந்தவரை, மறுபடியும் வம்பு வழக்கில் இழுத்துவிடுகிறார்கள் பாழாய்ப்போன இந்த பத்திரிகையாளர்கள்.

சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் இயக்குனர் விஜயும், நடிகர் விஜய்யும் கைகோர்த்தது பழைய கதை. இந்தக் கைகோர்ப்பை கழட்டிவிட்டு சிண்டு முடிய விரும்பும் சிலர், ‘தாண்டவம்’ படம் பார்த்த பிறகு, விஜய் இயக்கத்தில் நடிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கிறார் இளையதளபதி என்று கொழுத்திப்போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘அவர் எதாவது ஒரு டி.வி.டி யிலருந்தோ அல்லது ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் கதையையோ அள்ளிட்டு வந்து அளப்பறை பண்ணுவார். பத்திரிகைக்காரங்க, அவரோட சேர்த்து நம்மளையும் காய்ச்சி எடுப்பாய்ங்க’ என்று தளபதியின் நலம் விரும்பிகளும், சந்தில் புகுந்து தங்கள் பங்குக்கு சங்கு ஊத, பெரும் குழப்பத்துக்கு ஆளாகிவிட்டாராம் விஜய்.

நடப்பது எதையும் அறியாதவர் போல், இரு தினங்கள் முன்பு, கதையில் கடைசியாக செய்த கரெக்‌ஷன்களை சொல்ல, இந்த விஜயை அந்த விஜய் தொடர்பு கொண்டபோது,’’ கொஞ்சம் டயர்டா இருக்கு. அதை தீபாவளிக்கு அப்புறமா கேக்குறேன் சார்’’ என்றாராம் நொந்த விஜய்.

கியூவுல, இயக்குனர் விஜய்க்கு அடுத்தபடியா நிக்கிறவங்க, ரெடியா இருங்க பாஸ்.