விஜய் அண்ட் விஜய் படப்பிடிப்பில் நடக்கவிருக்கும் விபரீதங்கள்

இனிமேல் சரியான கல்லுளிமங்கன் என்று சொல்வதற்குப் பதில், சரியான ‘தாண்டவம்’ விஜய் என்று சொன்னால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும் என்கிற அளவுக்கு போகின்றன கதைத்திருட்டில் அவர் நடந்துகொள்ளும் விதம்.

படம் ரிலீஸான தினம் வரை ‘தாண்டவம்’ என்னுடைய கதைதான்’ என்று வாயைத்திறக்காத விஜய், இயக்குனர் பாரதிராஜா ‘ கதையைத் திருடுன பாவத்துக்காக பொன்னுச்சாமிக்கு ஒரு படம் குடு’ என்று சொன்னபோது வாயைத்திறக்காத விஜய், நேற்று அவசர அவசரமாக, ஒரு சில பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து முதல்முறையாக ‘தாண்டவம்’ என்னோட கதைதாங்க. அதை நான் பொன்னுச்சாமி கிட்டருந்து திருடலை’ என்று திரு[ட்டு]வாய் மலர்ந்தார்.

படம் ரிலீஸாகி பொட்டி[?] திரும்பிய பின்னர்,நடந்த பிரஸ்மீட்டுக்குப் பின்னால், மறுபடியும் இயக்குனர் விஜயின் சுயநலம் மட்டுமே இருக்கிறது.

இவரைப்பற்றி தொடர்ந்து வெளிவரும் காண்ட்ரவர்ஸிகளால் கவலையடைந்த நடிகர் விஜய், அடுத்த படம் இவரது இயக்கத்தில் நடிப்பது சரியாக இருக்குமா? என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இன்னொரு பக்கம் பொன்னுச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் ’புதிய அலைகள்’ அமைப்பினர், விஜய் பொன்னுச்சாமிக்கு பரிகாரம் எதுவும் செய்யாமல்,அடுத்த படத்தை இயக்கத் துவங்கினால், அந்தப்படப்பிடிப்பில் தொடர்ந்து மறியல் செய்யவும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இதைக்கேட்டு வெலவெலத்துபோயிருக்கும் விஜய், தனது அடுத்த படத்துக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாதே என்ற பதட்டத்தில்தான் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.

இதைத்தான் ஆறிய கூத்து ஆடினாலும் தாண்டவக்கோனே, காரியக்கூத்தா ஆடிமுடிடா தாண்டவக்கோனே என்றார்களோ?