நயன் தாராவின் தூக்கம் வராத ராத்திரி

இது ஏதோ நயன் தாரா நடிக்கும் பிட்டு பட டைட்டில் என்று அட்டுத்தனமாக நினைத்துவிட வேண்டாம். ரொம்பப் பெரிய இடத்து சங்கதி இது.

இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் வெங்கடேசின் மகன், அதாவது புரியும்படி சொல்வதானால் த்ரிஷாவின் காதலர் ராணாவுடன் நயன் ஜோடி சேர்ந்திருக்கும்,’கிருஷ்ணம் வந்தே ஜகத்குரம்’ என்ற பட்த்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய, பிரபல தயாரிப்பாளரும், ராணாவின் தாத்தாவுமாகிய ராமாநாயுடு, நயன் தாராவைப் பார்த்து, ‘உன்னை முதன் முதல்ல என் மகன் வெங்கடேஷ் பட ஷூட்டிங் செட்ல வச்சி பாத்தப்பவே கேக்கணும்னு நினைச்சேன். அதை இப்ப கேக்குறேன். என் மகன் கூட ஜோடியா நடிச்சிட்டே. இப்ப என் பேரன் கூடவும் ஜோடி சேர்ந்துட்டே. என் கூட எப்பம்மா டூயட் பாடப்போறே?

மொத்த அரங்கமும் சிரிப்பொலியில் அதிர, வெட்கத்தால் சுமார் 5 நிமிடங்களுக்கும் மேல் தலைகுனிந்தபடியே இருந்தாராம்.

இந்தி,பெங்காலி,தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் 130 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தவரான ராமாநாயுடுவுக்கு வயது இப்போது 76.

‘சினிமாவுல எவ்வளவோ சாதிச்சவரு. ஒரேயடியா அவரு காமெடியா பேசுனாருன்னு எடுத்துக்க முடியாது. ‘முதல் மரியாதை’ மாதிரி ஒரு சப்ஜெக்டை கையில எடுத்துக்கிட்டு, சீரியஸாவே உன்னை ஜோடியா நடிக்கச்சொல்லி கேட்டாலும் கேப்பார் எங்க தாத்தா’’ என்று ராணா நயனை வெறுப்பேத்த,விழா நடந்த அன்று இரவு துக்கத்தில் தூக்கம் வராமல் தவித்தாராம்.