தண்டஞ்செயன்’-’பாட்டு வாங்கப்போனேன், ஒரு பூட்டு வாங்கி வந்தேன்’

தாண்டவம்’ படத்தைப் பத்தி இனி எந்த நியூஸும் எழுதக்கூடாது. அப்பிடி எழுதுவது அந்தப் படத்தையும் விட போரடிக்கிறது என்று முடிவெடுத்து ஒரு வாரமாகியும், தொடர்ந்து நடக்கும் காமெடிகள் நமது முடிவை வெடிவை த்து தகர்க்கின்றன.

யு.டி.வி.யின் செயல் அதிகாரி, இணைத்தயாரிப்பாளர், தென்னகமுதலாளி,நிறுவனத்துக்கு பூட்டு வாங்கிப் போடத்துடிப்பவர் என்று தசாவதாரம் கமலையும் விட அதிக அவதாரங்கள் கொண்ட தனஞ்செயன், நேற்று மாலை கமிஷனர் அலுவலகம் சென்று ‘டோரண்ட்’ என்ற இணையதளத்தின் மீது ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.

அதாகப்பட்டது, பாடல்கள்,கதை எதையும் எங்கிருந்தும் காப்பியடிக்காத ‘தாண்டவம்’ படத்தினை ‘டோரண்ட்’ இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டிருப்பதாகவும், இதனால், கோடிக்கணக்கில் தங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்பதும் தனஞ்செயனாரின் குற்றச்சாட்டு.

இதற்கு கமிஷனர் ஆபிஸ் என்ன சொன்னது என்பது இருக்கட்டும். செய்தியைப் படித்த உடனே ‘டோரண்ட்’ ஆட்களுக்கு வந்ததே ஒரு தார்மீகக் கோபம். உடனே தன்ஞ்செயனுக்கு கீழ்க்கண்டவாறு ஒரு மெயில் தட்டி விட்டிருக்கிறார்கள்.

‘யோவ் பாழாப்போன ‘தாண்டவம்’ படத்தை இலவசமா கூட ஒரு பயலும் பாக்க தயாராயில்லை. இவ்வளவு தண்டமாவா படம் எடுத்து வப்பீங்க? இப்ப எங்களுக்கு, கஷ்டப்பட்டு அப்-லோட் பண்ணுன காசு கூட வராது போலருக்கு. மரியாதையா அந்த அமவுண்டை எங்களுக்கு அனுப்பி வைக்கல, நாங்களும் கமிஷனர் ஆபீஸ் போவோம்’

செய்வதறியாது திகைத்து நிற்பது என்று சொல்வார்களே அப்படி ஒரு போஸ்-ல் அமர்ந்திருக்கிறாராம் தனஞ்செயன்.