aja1

  தெலுங்கில் கொடிகட்டிப்பறந்தாலும் தமிழில் பெரிய படங்கள் கிடைக்காதா என்று தவியாய் தவிப்பவர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.

நடுவில் பெரிய கேப் வேறு விழுந்துவிட்டதால், அஜீத் -சிறுத்தை சிவா

இணையப்போகும் படத்தைக் கைப்பற்றியே தீருவது என்ற முடிவில், குறி வைத்து மூவ் வைக்க ஆரம்பித்தார்.

அஜீத்தின் சாய்ஸ் எப்போதும் போலவே யுவன் ஷங்கர் ராஜாதான் என்ற நினைப்பில் இருந்த சிவாவை, பிரசாத் கல்லாய் கரைக்க அவரோ ‘ அஜீத் ஓ.கே.ன்னு எனக்கும் நீ ஓ.கே.தான்’ என்று தல திசையை நோக்கி ரீடைரக்ட் பண்ணிவிட, விஷ்ணுவர்த்தன் படம் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கெல்லாம் விடாமல் படையெடுக்கிறாராம் தேவிஸ்ரீபிரசாத்.

‘ இந்த கதாநாயகி, மியூசிக் டைரக்டர்,கேமராமேன் பஞ்சாயத்துல எல்லாம் நான் எப்பவுமே தல’ய உடுறதில்லை. நீங்க டைரக்டரையும், புரடியூசரையும் போய்ப்பாருங்க’ என்று படையெடுப்புக்கு தடைவிதித்து அனுப்பிவைத்தாராம் அஜீத்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.