கே.வி. ஆனந்துக்கு ‘வெரி ஸாரிய்யா’ சொன்ன சூரியா

akv1

  வழக்கமாக படம் வெற்றிபெற்றால் மட்டுமே பிரஸ்மீட் வைப்பவர்கள் மத்தியில், ‘மாற்றானின் படுதோல்விக்கு பிரஸ்மீட் வைத்துக்கொண்டாடினார் முன்னாள் ஒளிப்பதிவாளரும்,

நேற்றைய இயக்குனரும், வருங்கால ஸ்டில் போட்டோகிராபருமான கே.வி.ஆனந்த்.

மட்டன் பிரியாணியோடுமாற்றான்குறித்தஆவ்சம்கொஞ்சம் டாவு சம் தகவல்களை பத்திரிகையாளர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்என்ற கே.வியின் அழைப்பை பெரும்பாலான பத்திரிகையாளர்கள், பாவம் பார்த்து புறக்கணித்திருந்த நிலையில், படத்தை ஈராஸிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, நிலைகுலைந்து போயிருந்தசகுனிஞானவேல் ராஜாவும் ஆஜராகியிருந்தார்.

நீங்க என்னோட முந்தைய படங்கள பாராட்டுனப்ப எப்படி பரவசமா அதை ஏத்துக்கிட்டேனோ, அதே அதிரசத்தோடதான், உங்க வறுத்தெடுப்புகளையும் எடுத்திக்கிட்டேன்என்று உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேனாக வெளுத்து வாங்கிய கே.வி. ஆனந்த், அடுத்த படம் குறித்து முடிவு செய்ய நீண்ட அவகாசம் எடுக்கவிருக்கிறாராம்.

படம் ரிலீஸான நாள் மாலைவரை அகிலன், விமலன் போல் கேவியுடன் வலம் வந்த சூர்யா, படம் ஃப்ளாப் என்று கன்ஃபர்ம் தகவல் வந்த கணம் முதல், அறுபட்ட அகிலன் போல் தனியாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.

நேற்றைய பிரஸ்மீட்டுக்கு கேவி ஆனந்த் எவ்வளவோ கெஞ்சி அழைத்தும்வெரி ஸாரிய்யாசொல்லிவிட்டார் சூரியா.

akv