ராபர்ட் பேட்டின்சன் - கிரிஸ்டன்

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கப் பத்திரிக்கைகள் நடிகை கிர்ஸ்டனின் பின்னாலேயே சென்று துப்பறிந்து கிரிஸ்டனுக்கும் டைரக்டர் ருபர்ட் சேன்டர்ஸூக்குமிடையே உள்ள ரகசிய உறவை அம்பலப்படுத்திவிட்டன.

இதனால் மனம் உடைந்து போன கிரிஸ்டனின் காதலரும் நடிகருமான ராபர்ட் பேட்டின்சனுக்கு கிரிஸ்டன் பத்திரிக்கைகள் வழியாக

பகிரங்க மன்னிப்புக் கடிதம் போன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

ராபர்ட் பேட்டின்சன் தற்போது தனது காதலியுடனான முறிந்த காதலை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுவிட்டார் என்று கான்டாக்ட் மியூசிக் என்கிற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

என்னதான் தனக்குத் துரோகம் செய்திருந்தாலும் கிரிஸ்டனின் மேலுள்ள தனது காதல் மாறவே இல்லை என்பதையுணர்ந்த ராபர்ட் கிர்ஸ்டனுடன் மீண்டும் இணைந்து ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துவிட்டார்.

கிரிஸ்டனும் தனது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தால் அதை நிரூபிக்க தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ராபர்ட் கேட்டுக்கொண்டதாகவும், எனவே கூடிய விரைவில் இவர்களது திருமணச் செய்தி வெளிவரலாம் என்றும் ஒரு கிசுகிசு போட்டோ பத்திரிக்கை கூறுகிறது.

“இதில் ஒரு விஷயம் கவனித்தீர்களா? கிரிஸ்டன் தேடிப்போய் ராபர்ட்டிடம் மன்னிப்புக் கேட்டு காதலை புதுப்பிக்கவில்லை. ராபர்ட் தான் தேடிப் போயிருக்கிறார். எனவே ராபர்ட் மீண்டும் ஒரு பெரிய ‘ஆப்பு’ வாங்குவதற்கான எதிர்காலம் பிரகாசமாய்த் தெரிகிறது” என்பது நம் கிளியாரின் அபிப்ராயம்.

அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது அவர்கள் இனிமேலாவது நன்றாய் வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல எல்லா கடவுள்களையும் பிரார்த்திப்போமாக.

தொடர்புடைய செய்தி

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.