’ரெண்டாவது ஜடம்’-’ டெத்துக்கு கூட வைக்கிறாய்ங்க குத்து சாங்’

தனது முதல் படமான ‘தமிழ்ப்படத்தில் தமிழ்சினிமாவை எக்காளம் பாடிய சி.எஸ். அமுதனின் ‘ரெண்டாவது படம்’ ஏறத்தாழ முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது.

படத்தின் கதை குறித்து யாரும் எங்கும் மூச் விடக்கூடாது என்று சத்தியம் வாங்காத குறையாக அமுதன் கறார் காட்டியதால் அதில் நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களுமே’ ரெண்டாவது படம்’ குறித்து ஏதாவது பேச ஆரம்பித்தாலே, ‘கொஞ்சம் இருங்க. ரெண்டுக்கு போயிட்டு வந்துர்றேன்’ என்றபடி நம்மை ஒண்டியாக விட்டுவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.

சரி படம் பற்றி ஒரு செய்தியுமே தராமலிருந்தால், ரிலீஸ் நேரத்தில் நம்மை கட்டம் கட்டி விடுவார்கள் என நினைத்தோ என்னவோ, அமுதன் படம் குறித்த ஒரே ஒரு ரகசியத்தை மட்டும் ரவுண்டில் விடுகிறார்.

இவ்வளவு காலமும் காதலுக்கு, கிரிக்கெட்டுக்கு,காதல் தோல்விக்கு,நட்புக்கு என்று எவ்வளவுக்கோ குத்து சாங், பார்த்த ரசிகர்களுக்கு முதல் முறையாக சாவுக்கு ஒரு குத்து சாங் படத்தில் வைக்கவிருக்கிறாராம்.

இப்பாடலை கோர்க்க இருப்பவர் லிரிக் எஞ்சினியரான மதன் கார்க்கி.

’அண்ணாத்தே ஆடிக்கோ டெத்துக்கு குத்து

பொண்ணாத்தா ஓடிப்போ,அப்பத்தான் கெத்து’ – ஒருவேளை பாட்டை இப்பிடி ஆரம்பிப்பாய்ங்களோ?