சாயிப் – கரீனா.. கணவன் – மனைவி

saif-kareena-wedding

ஹிந்திப் படத்தில் அல்ல நிஜமாகவே. நேற்றைய வட இந்தியாவின் டாப் ஹாட் நியூஸ் இது தான். நேற்று 16ம் தேதி காலை 11 மணியளவில் மும்பையிலிருக்கும் சாயிப்ன் வீட்டில் சாயிப் அலிகானுக்கும், கரீனா கபூருக்கும் ரிஜிஸ்திரார் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த ரிஜிஸ்டர் மேரேஜூக்கு வந்தவர்கள் சாயிப் அலிகானின்

அம்மா ஷர்மிளா தாகூர் (நவாப் பட்டோடியின் மனைவி), மற்றும் கரீனா கபூரின் அம்மா,அப்பா ரந்தீர் கபூர் – பபிதா. முக்கியமான விருந்தினர் கரீனாவின் தங்கை பாலிவுட் ஹாட் கரீஷ்மா கபூர் தான்.

5 வருடங்களாக நாங்கள் சும்மா ப்ரெண்ட்ஸ்’, ‘இல்லே திக் ப்ரண்டஸ், என்று சொல்லி பின்னர் காதலர்களாகவே சிறகடித்துப் பறந்த இந்த ஜோடி இப்போது திருமணத்தில் இணைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை மாப்பிள்ளை சாயிப்பின் இஸ்லாமிய முறைப்படி ஒரு நிக்காவும், பின்னர் கரீனாவின் கிறித்துவ முறைப்படி ஒரு திருமணமும் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்.

மதச்சார்பற்ற இந்தியா இது என்பதை நிரூபிக்கும் ஸ்டார் மணமக்கள் இவர்கள்.

வாழ்க..வாழ்க..