’வேற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க பயமாயிருக்கு’ – விஜய் ஆண்டனி

thirudan

‘நான்’ படத்துக்கு, நான் 50 வது நாள் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது பத்திரிகையாளர்களான உங்களது சிறந்த விமர்சனங்கள்தான். இதை நான் என்றும் மறக்க மாட்டேன்’ என்று நெகிழ்பவர் ஹீரோ அவதாரத்தை சீரியஸாக தொடர விரும்பும் ‘மக்கலாயா மக்கலாயா’ விஜய் ஆண்டனி.

நேற்று மாலை,ஹோட்டல் விஜய் பார்க்கில் நடந்த’வாயேஜ் எக்ஸ்போ 2012’ன் லோகோவை வெளியிட்டுப் பேசிய விஜய் ஆண்டனி, தான் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்.

‘’இனிமே வருஷத்துக்கு மூனு படங்களாவது நடிக்கனும்னு முடிவு எடுத்திருக்கேன்.இப்போதைக்கு,’திருடன்’ சலீம்’னு ரெண்டு கதைகள்ல நடிக்கப்போறேன்.

டைரக்டர்,மற்ற டெக்னீஷியன்கள்,சக நடிகர்கள் பத்தின விபரங்களை சீக்கிரமே வெளியிடுறேன்.

ஆனா ஒரு நாலஞ்சி படம் வரைக்கும் என் சொந்த பேனர்லயே பண்ண முடிவெடுத்திருக்கேன். காரணம் என் பேனரா இருந்தா,மனசுக்கு திருப்தி ஏற்படுறவரைக்கும்,செலவைப்பத்தி கவலைப்படாம, ரீ-ஷூட் பண்றது மாதிரி கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக்கலாம்.

மத்த தயாரிப்பாளர்கள் கிட்ட இந்த சலுகையை எதிர்பார்க்கமுடியாது’’ என்கிறார் விஜய் ஆண்டனி.

பேச்செல்லாம் தெளிவா இருக்கு. பாட்டு மட்டும்தான் புரியாத பாஷையில போடுவாரு போலருக்கு.