பழையபடி வேண்டாத வேலையில இறங்கிட்டாரு விஜய் மில்டன்

விஜய் மில்டனின் பசங்க - 2?

தமிழ்சினிமா கேமராமேன்கள் அத்தனைபேருக்கும், ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் கொம்பு முளைக்கும் ரகசியம் என்னவென்றுதான் புரியவில்லை.

ஏற்கனவே ஒரு அரைடஜன் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகி,ரசிகர்களை மயக்குனவர்களாகி விட்ட நிலையில் இப்போது பி,சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன்,ரவி.கே.சந்திரனுக்கு அடுத்தபடியாக, விஜய் மில்டனும் இயக்குனராகிவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பயமுறுத்தினாரே, அதே விஜய் மில்டன் தான், மக்கள் பழசை மறந்திருப்பார்கள் என்ற தைரியத்தில் மீண்டும் இறங்கியிருக்கிறார்.

இவர் இம்முறை இயக்கவிருப்பது, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பசங்க’ படத்தின் பார்ட் 2’ வை.

அப்போது குழந்தைகளாக இருந்து கொஞ்சம் வளர்ந்த அதே பிள்ளைகள், வளரும்போது ஏற்படும் பிரச்சினைகள் ‘பசங்க 2’வின் கதையாம்.

மேட்டரு கேக்க அழகாத்தான் இருக்கு. ஆனா நீங்க டைரக்ட் பண்ணப்போறதை நெனச்சாத்தான் பயமா இருக்கு.