’தமிழ் சினிமா எனக்கு மாமியார் வீடு மாதிரி’- அமலா பால் அளக்குறாங்க

amala-paul-tamil-rentry-25Nov12

திடீரென்று விஜய் அண்ட் விஜய் படத்தின் ரெண்டு ஹீரோயின்களில் ஒன்றாக கமிட் ஆனதில் தலைகால் புரியாமல் தவிக்கிறார் அமலா பால்.

திடீரென்று இவ்வளவு பெரிய காம்பினேஷன் வந்ததால்,எந்த விஜய் எப்ப கூப்பிடுவாங்கன்னு தெரியலை’ என்றபடி, கேரளாவிலிருந்து தனது பொட்டி படுக்கைகளைத்தூக்கி வந்து மறுபடியும் சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டாராம் இந்த ‘சிந்து சமவெளி’.

‘இனியாவது கிசுகிசு எழுதுறப்ப டைரக்டர் விஜய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு, எனக்கும் நடிகர் விஜய்க்கும் நடுவுல ‘அது இது எது’ன்னு எழுதுங்கப்பா ‘ என்று அளப்பறை விடும் அளவுக்கு தெனாவெட்டாகிவிட்ட அமலாவுக்கு, மலையாள சினி ஃபீல்டு அம்மா மாதிரியாம். தெலுங்கு ஃபீல்டு அப்பாவாம். நம்ம தமிழ்சினிமாவில்தான்  தான் கட்டிக்கப்போகும் மாப்பிள்ளை இருப்பதால் இது அவருக்கு மாமியார் வீடு மாதிரியாம்.

நம்மள மாதிரி கொழுந்தனார்களுக்கு எப்ப விருந்து கொடுப்பாங்கன்னுதான் இன்னும் சொல்லலை.