விமர்சனம்-அம்மாவின் கை பேசியில் பேட்டரி நஹி..

ammavin-kaipesi-review

‘’சர்வதேச இயக்குனர்கள் லிஸ்ட்ல இடம் பிடிச்சிருக்கவேண்டிய ஆளு நான். என்னோட முந்தின பட இசையமைப்பாளருங்க, என் படம் இருந்த தரத்துக்கு இசையமைக்காததால உள்ளூர் இயக்குனராவே நான் இருக்கவேண்டியதாப்போச்சி’’ என்று வாய்க்கொழுப்பின் உச்சக்கட்டமாக பேசி,

மும்பையிலிருந்து ரோஹித் குல்கர்னி என்ற இசையமைப்பாளரின் இசையுடன் வெளிவந்திருக்கும் ‘அம்மாவின் கைப்பேசி’ தங்கரை சர்வதேச அளவுக்கா அல்லது அதையும் தாண்டிக்கொண்டு சென்றிருக்கிறதா என்று பார்ப்போமா?

கதை? ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு அம்மா. அந்த அம்மாவுக்கு ஒன்பது புள்ளைங்க. அந்த அம்மாவை எட்டுப்பிள்ளைங்களும் கைவிட்டுவிட, கடைசிப்பிள்ளை சாந்தனுவாவது கஞ்சி ஊத்துவான்னு நெனச்சி, அவன,’வெளியூரு போய் சம்பாதிச்சிட்டு வாடா’ன்னு வெளக்குமாத்தால அடிச்சி துரத்தி விடுறாங்க.

வெளியூரு போன பிள்ளை சம்பாதிச்சானா? உள்ளூர்ல உள்ளூற தவிக்க வுட்டுட்டுப்போன மாமன் மகளை கைப்பிடிச்சானா?ன்னு ஒரு டிராக்லயும், இன்னொரு பக்கம் தங்கர் மச்சான் பார்வையில, சாந்தனுவை கொலை பண்ணிட்டு அவனோட பணத்தை, அவனோட அம்மாவோட பொணத்து பக்கத்துல கொண்டுபோய் வைக்கிறதுன்னும் போகுது.

நீங்க நார்மலான மனநிலையில படம் பாக்கப்போனா மெண்டலாவும், மெண்டலான மனநிலையில பாக்கப்போனா நார்மலா திரும்புறதுக்கும் வாய்ப்பை தரக்கூடிய ஒரு கதைன்னு இதையே சுருக்கமாவும் சொல்லலாம்.

தயாரிப்பும் நம்ம கஞ்சர் பச்சானேங்கிறதாலோ என்னவோ குறிப்பா ஒளிப்பதிவுல தொடங்கி மொத்தப்படமும் பழையபடி தூர்தர்ஷன்ல ஒரு ‘வயலும் வாழ்வும்’ பாத்த ஃபீலிங்கை அப்படியே ஏற்படுத்துது.

குறிப்பா இந்தப் படத்துல விமர்சிக்க வேண்டிய விஷயம் இசை. ஏன்னா சர்வநா(தே)சமா போயிருக்க வேண்டிய தன்னை முந்தைய பட இசையமைப்பாளர்கள்தான் இழுத்துப்புடிச்சி நிப்பாட்டி வச்சிருந்தாங்கன்னு சொன்ன அவரோட இந்தப்பட இசை எப்பிடியிருந்ததுன்னு சொல்ல வேண்டாமா?

ராப்பிச்சைக்காரன் அகால வேளையில ஒரு அஞ்சி ரவுண்ட் போயிட்டு வந்தா அவன் தட்டுல மிஞ்சுமே அப்பிடி ஒரு ’வெரைட்டியான’ ஸ்மெல் வரக்கூடிய  அஞ்சு பாட்டு. எந்த சூழலுக்கு என்ன மாதிரியான இசைக்கருவியைப் பயன்படுத்தனும்னு தெரியாத ஞானசூன்யமான பின்னணி இசை. மொத்தத்துல இந்த வருஷத்தோட சிறந்த இசைக் குப்பைன்னு சொன்னா அது மிகையில்லை.

கதை,திரைக்கதை,ஒளிஓவியம், நெறியாள்கை, பொறியல் செய்கைன்னு ஏகப்பட்ட டிபார்மெண்ட்ல டிராவல் பண்ணுனது போதாதுன்னு, சாந்தனுவை, கதைப்படியும், அவரோட சினிமா வாழ்க்கையையும் சாகடிக்கிற ஒரு கேரக்டர்லயும் நடிச்சிருக்கார் தங்கர். இவரு நடிப்பை மட்டும் நம்ம தீவிரவாதி கசாப் பாத்தான்னா போதும் அவனை தூக்குல போடத் தேவையே இருக்காது. தானே மேல போய்ச் சேர்ந்துருவான்.

தன்னை ஒரு யதார்த்த இயக்குனர்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கனும்னு நினைச்சோ என்னவோ படம் முழுக்க, சம்பந்தா சம்பந்தம் இல்லாம பன்னிகளுக்கும், நாய்களுக்கும் அடிக்கடி க்ளோஸப் போட்டுக்கிட்டேயிருக்கார்.

அம்மாவின் கை பேசி.. தங்கரின் வாய் பேசிய அளவுக்கு டவர் இல்லாததால் சிக்னல் கட்டாயிடுச்சி, பேட்டரி வீக்காயிடுச்சி.

மத்தவங்களை டபாய்க்காம இனியாவது கை பேசியை ஒழுங்கா ரீசார்ஜ் பண்ணுங்கோ தங்கர்.