ஜோதி கிருஷ்ணா பாடும் ஊ..லல..லா..

amratnam-son-jothikrishna-ishwarya--weds

இந்தியன், குஷி, ரன், கில்லி போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் மகனும்
இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கு டும் டும் டும்.

அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வருகிற இருபத்து மூன்றாம் தேதி திருமணம் ஒரு ஹோட்டலில் வைத்து நடைபெறுகிறது.
இது மணமகன் – மணமகள் குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வைபவமாக நடைபெறும்.

அதன்பிறகு இருபத்தாறாம் தேதி திருமண வரவேற்பு. ஹைதராபாதில் பிரம்மாண்ட ஹோட்டலான லீலா பாலஸில் நடைபெறுகிறது.. இதில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் திரை உலகை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

ஜோதி கிருஷ்ணா எனக்கு 20 உனக்கு 18ன் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஜோதி கிருஷ்ணா மிக மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். காரணம்.. அவரது படமான ‘ஊ லலலா’ ரிலீஸ், அடுத்து அப்பா தயாரிக்கும் அஜித் படம், தவிர தனக்கு திருமணம் என தொடர்ந்து வாழ்வில் நடக்கும் நல்ல விசயங்கள்.

இவை எல்லாவற்றுக்கும் சாய் பாபாவின் அருளே காரணம் என்று தீவிர சாய் பாபா பக்தர்களான கிருஷ்ணாவும் அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யாவும் (கிருஷ்ணா.. உங்க அடுத்த படத்துல ஹீரோயின் இவங்க தானோ?) நம்புகிறார்களாம்.

ஓம் சாய் ராம்..