kamal-ameer-viswaroopam-1

ஸ்கிரிப்ட் எழுதும்போது பயன்படுத்த வேண்டிய கிரிமினல் மூளையை சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்தி அடிக்கடி இன்னல்களை இழுத்துப்போட்டுக்கொண்டு அலைபவர் கமல் என்பது, அவர் பாணியிலேயே சொல்வதானால் அவர் உட்பட அனைவருக்குமே தெரியும்.

தற்போது திரைக்கு வந்து பல சர்ச்சைகளை சந்தித்து வரும் ‘துப்பாக்கி’ அணியினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் இவ்வளவு பெரிய அளவில் திரண்டு நிற்பார்கள் என்று எதிர்பாராத, மற்ற எல்லோரையும் விட அதிக வெலவெலப்புக்கு ஆளாகியிருப்பவர் நம்ம ஆளவந்தாந்தானாம்.

‘விஸ்வரூபத்தில்’ துப்பாக்கி போலவே படம் முழுக்க இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றி பேசியிருக்கும் கமலிடம்,’ உங்கள் படமும் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தானே பேசுகிறது?’ என்று கேட்டால் வழக்கம்போலவே கேள்வியை திசை திருப்பி,’ விஸ்வரூபம்’ படத்தைப் பார்ப்பதற்கு சற்றே கூடுதல் அறிவும் உலக ஞானமும் வேண்டும் ‘ என்றும் பதில் தருகிறார்.

இதுல என்னப்பா கிரிமினல் வேலை இருக்கு என்கிறீர்களா?’

கிரிமினல் வேலை இதில் இல்லை. ‘விஸ்வரூபம் படத்துக்கு புதிதாக கமிட் பண்ணப்பட்டுள்ள நடிகரில் இருக்கிறது.

சமீபத்தில் தனது அலுவலகத்துக்கு அவசரமாக இஸ்லாமிய சகோதரர் நடிகர் அமீரை வரவழைத்த கமல், ‘விஸ்வரூபம்’ படத்தின் ஆரம்பக்காட்சியில் அமீர் தோன்றி பேசுவதுபோல் ஒரு காட்சியை ஷூட் பண்ணி சேர்த்திருக்கிறாராம்.

படத்துக்கு எதிர்ப்பு வந்தால் கமல் சார்பாக அமீர் விளக்கம் சொல்வார். எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் கமலின் அடுத்த படத்தை அமீரே இயக்கவும் செய்வார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.