ராமின் தங்க மீன்கள்

thanka-meengal-pressrel-nov12

தங்க மீன்கள் படம் ஒருவழியாக முடிவடைந்து கடைசிகட்ட வேலைகளில் இருக்கிறது.

இப்படத்தின் கதை எந்த வெளிநாட்டுப் படங்களின் கதையாகவும், டிவிடி கதையாகவும் இல்லாமல் சொந்த அனுபவங்களின்

தொகுப்பாகவே இருக்கும் என்கிறார் ராம்.

இக்கதை ஒரு தகப்பனுக்கும் அவனது மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு பற்றிய கதை என்கிறார். இந்தக் கதையை கேட்டதும் கௌதம் மேனன் நெகிழ்ந்து போய் ராமை ஆரத் தழுவி பாராட்டினாராம். அத்தோடு இப்படத்தை தானே தயாரிப்பதாகவும் ஆனால் அதில் அந்த தகப்பன் கேரக்டரில் ராமே நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தாராம்.

இப்படத்தில் ராமினுடைய மகளாக நடிக்கும் சாதனாவின் வயது தற்போது 9 ஆகிறது. படத்தின் கதைப்படி ஒரு குழந்தையின் 6 முதல் 9 வரையிலான வயதுக் கட்டத்தில் தோன்றும் மன ஓட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்ய விரும்பியதால் மூன்று வருடங்கள் படமாக்கியதாகச் சொல்கிறார்.

ஆனாலும் மொத்தத்தில் 60 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். நடிகை ரோகினி குழந்தை சாதனாவின் அம்மாவாகவும், நடிகர் கருணாஸ் ஒரு முக்கிய பாத்திரத்திலும்     நடிக்கிறார்கள்.

இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லாக பார்க்கப்படும் என்று நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் இந்தத் தங்க மீன் அப்பா.