இந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் லிஸ்டில் பாடகி ரிஹான்னா

rihanna-men-of-the-year-gq-magazine

ஜிக்யூ(GQ) என்கிற அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இதழ் வருடா வருடம் இந்த ஆண்டின் ‘மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள்’ என்கிற பட்டியலைத் தேர்ந்தெடுத்து வெளியிடும்.

இந்த ஆண்டு அப்பட்டியலில் பென் அப்லக்(Ben Affleck), சேன்னிங் டாட்டும், க்வென்டின் டெரான்டினோ மற்றும் உசைன் போல்ட் போன்ற ஆண்களுடன் புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹான்னாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

மோடி(MOTY) லிஸ்ட் என்ற பெயரிடப்படும் இந்த லிஸ்ட்டில் இந்த ஆண்டு படு கவர்ச்சியான செக்சியான பெண் ரிஹான்னா என்று அவர் லிஸ்ட்டை சேர்த்ததோடு அல்லாமல் வெறும் மழைக் கோட் மட்டும் அணிந்து அதில் அனைத்து பட்டன்களையும் திறந்து விட்டபடி ரிஹான்னா நிற்கும் புகைப்படத்தையும் அட்டைப் படத்தில் வெளியிட்டுள்ளது (சத்தியமா மேலே இருக்கிற இந்த போட்டோ இல்லீங்க. அது அடல்ட்ஸ் ஒன்லி போட்டோ…).

இத்தோடு இப்புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் எழுத்தாளர் ஜே பல்கர்(Jay Bulger) ரிஹான்னாவுடன் ஒரு நைட் கிளப்புக்குச் சென்றதையும், அங்கே அதே நேரத்தில் அவளது காதலரான க்ரிஸ் ப்ரௌன் வந்ததையும், க்ரிஸ் ப்ரௌனைக் கடுப்பேத்த வேண்டுமென்றே

ரிஹான்னா பல்கருடன் இணைந்து ஆடியதையும், போதை சிகரெட் பிடித்ததையும், கடைசியில் வெறுத்துப் போன க்ரிஸ் ப்ரௌன் க்ளப்பின் ஸ்டேஜில் ஏறி நின்று கத்தியதையும் விலாவரியாக விவரிக்கிறார்.

இந்தப் பொண்ணு தான் அனைவராலும் விரும்பப்படும் பொண்ணாம்.. ஸாரி. ஆணாம்.  

ஒரு வேளை ரிஹான்னா நம்ம வீராங்கனை பிங்கி போல அவனா ..?