இன்பாக்ஸ் – குறும்படம்

inbox-tamil-shortfilm-review

நாளைய இயக்குநர் சீசன் 3ல் போட்டியிட்ட படம். பரிசு ஏதும் வாங்கியதா தெரியவில்லை.

க்ராபிக்ஸ் எதுவும் இல்லாமல், கதைக்காக மெனக்கெடாமல் சிம்ப்பிளாக ஒரு ஐடியா வைத்திருக்கிறார்கள். படத்தில் அதுவே

சிறப்பாக இருக்கிறது.

ஒரு கிப்ட் ஷாப் கடைக்கு பரிசுப் பொருள் வாங்கச் செல்லும் ஒரு யுவன் மற்றும் யுவதி பற்றிய கதை. அவ்வளவே தான் கதை. இதுக்கு

மேல் எது சொன்னாலும் 8 நிமிஷக் கதையை நீங்கள் பார்க்கும் சுவராசியம் குறைந்துவிடும். இப்படத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி இதில் வசனங்களே இல்லை. பேசும்பட ஸ்டைலில் வசனங்கள் இருக்க வாய்ப்பு இருந்தும் தவிர்த்திருக்கிறார்கள்.

படத்தில் இரண்டே இரண்டு மெயின் கேரக்டர்கள். கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதில் இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும்,

இக்குறும்படத்தில் ஆழமான நடிப்பைக் கோருகிற காட்சிகள் இல்லாததால் இப்படத்தை மட்டும் இவருடைய இயக்கத்துக்கு

அளவுகோலாகக் கொண்டுவிட முடியாது.

மற்றபடி கதை, இயக்கத்தில் இயக்குனர் சொன்னவிதத்தில் தேறிவிடுகிறார் தான். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, மற்றும் முக்கிய

கதாபாத்திரங்கள் இருவர் என எல்லோரும் தமது பங்கைச் சரிவரச் செய்திருக்கின்றனர்.

பாருங்கள். வித்தியாசமான கற்பனையைக் கொண்ட இந்த இன்பாக்ஸை.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=75wNgCo-BQM

தயாரிப்பு – சிவபாலன், அனுராஜ். ஒளிப்பதிவு – ரவிவர்மா இசை – பாலமுரளி பாலு   எடிட்டிங், சவுண்ட் டிசைன் -அபினவ் சுந்தர்

நாயக்,  சவுண்ட் எபக்ட்ஸ் – நாராயணன்.  போஸ்ட் ப்ரொடக்ஷன் – நாயக் சினிமா. உதவி இயக்குநர்கள் -மரியா நிர்மல், வெங்கட்

ராஜேந்திரன்.  இயக்கம் – மடோன் அஷ்வின்.