‘விக்றோம், விக்றோம் விஸ்வரூபத்தை டி.டி.ஹெச்’ல விக்றோம்’- இறுதி முடிவை எடுத்தார் கமல்

a12d

வரும் பொங்கல் பண்டிகை கொஞ்சம் ஃபோர்சாகத்தான் இருக்கும்போல. குழப்பங்கள், கொந்தளிப்புகள்,தத்தளிப்புகளுக்கு மத்தியில், ’இனி மறுபேச்சுக்கே இடமில்லை. ‘விஸ்வரூபத்தை டி.டி.ஹெச்சில் வெளியிடுவது என்பதில் உறுதியாகவும், இறுதியாகவும்  இருக்கிறேன். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கும் இனி இடமில்லை’என்று

கறாராக அறிவித்தார் கமல்.
இதுதொடர்பாக நாளை மாலை ஹோட்டல் ஹயாத்தில் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள கமல், அங்கு தனக்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டுவதற்காக திரைப்படத்துறையின் பல்வேறு அமைப்புகளையும் கலந்துகொள்ளவைக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது கமல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,டி.டி.ஹெச் உரிமையை சன் டி.வி, ஏர்டெல்,வீடியோகான், பிக்,டிஷ்னெட் ஆகியவை பெற்றுள்ளன. இவ்வளவு பெரிய நிறுவனங்கள் தனக்கு ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து மிகவும் தெம்படைந்த கமல், இவ்வளவு நாட்களாக தனக்கு குடைச்சல் கொடுத்துவந்த தியேட்டர் சங்கங்களை சங்கறுக்க முடிவுசெய்து, தலைவர், தென்னிந்திய திரைப்பட சேம்பர், தலைவர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பு, தலைவர், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம், தலைவர், கோவை,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோரும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்துள்ளார்.
கமல் இவ்வளவு பெரிய படையைத் திரட்டுவார் என்று எதிர்பாராத எதிர் அணியினர் இன்னும் சில மணிநேரங்களில், அவரை அறுத்துக்கிழித்து தொங்கவிடும் அறிக்கைகளோடு கிளம்பிவருவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.