அமெரிக்காவை வைத்து படமெடுக்கும் கமல்

kamal-viswaroopam-poster-1

கமலை வைத்து ஹாலிவுட் அமெரிக்கர்கள் படம் பண்ணுவார்கள் பண்ணுவார்கள் என்று எதிர்பார்த்து ரொம்பவே சலித்துப் போன கமல் சரி நாம் அமெரிக்காவை வைத்துப் படமெடுப்போம் என்று இறங்கிவிட்டார் போல.

“தசாவதாரம் படத்தில் ஜார்ஜ் புஷ் வேடத்தில் கமல் வந்ததும்.. விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் கதை

இருப்பதும் தற்செயலானது தான்.. ஏன்ய்யா நீ சும்மா நோண்டறே” என்று நீங்கள் டென்ஷனாக வேண்டாம்.

விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று காலை மதுரையில் வேலம்மாள் கல்லூரி மைதானத்தில் கமல்ஹாசனால் படத்தின் ஆடியோ வெளியிடப்படும்.

அங்கிருந்து அப்படியே மத்தியானம் கோயம்புத்தூர் பறக்கும் கமல் அங்கு ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் ஆடியோவை மீண்டும் வெளியிடுகிறார்.

பிறகு அங்கிருந்து சென்னைக்குப் பறக்கும் கமல் சாயங்காலம் சென்னையில் மீண்டும் ஆடியோவை வெளியிடுகிறார் (அப்போ மூணு படமான்னு அப்பாவியா கேக்காதீங்க.. புதுமைங்க.. புதுமை).

ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லரை ஆசியாவிலேயே முதன் முறையாக 11.1 ஆரா சவுண்ட் டெக்னாலஜி உபயோகப்படுத்தி வெளியிட்டு புதுமை செய்திருக்கிறார் நம்ம சகலகலாவல்லவர்.

தீவிரவாதம் மெயின் சப்ஜெக்டாக வரும் இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஷேகர் கபூர் போன்றோர் நடித்துள்ளார்கள். ஷங்கர்-இஷான்-லாய் என்ற மூவர் இசையமைத்துள்ளார்கள்.

கமல் சார் நல்லா புதுமை பண்றீங்க.. கவலையே படாதீங்க ஹாலிவுட்காரய்ங்க உங்களை வெச்சி படமெடுக்காட்டி போனா என்ன, நாங்க எடுப்போம்னு ஒரு நல்ல ப்ரொட்யூசர் விஸ்வரூபத்துக்கு வந்தா மாதிரியே வரமாட்டாரா என்ன ?