நித்யஸ்ரீ கணவர் தற்கொலை ஏன்? – தடுத்தும் கேளாமல் கூவத்தில் குதித்தார்

nithyasree-mahadevan-death-photo1

நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை கணநேரத்தில் முடிவெடுத்து நடந்தது போல் தெரிகிறது. அவர் கூவம் ஆற்றில் குதித்த போது உடன் அருகில் அவரது டிரைவர் இருந்து அவரை தடுக்க முயற்சித்திருக்கிறார்.

மகாதவேன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து காரில் கடைக்குச் செல்வதற்காகத் தான் கிளம்பியிருக்கிறார். காரை

அவர்கள் வீட்டு டிரைவர் தான் ஓட்டி வந்திருக்கிறார்.

கார் அடையாறு பாலத்தினருகே வந்த போது அவர் போனில் யாருடனோ பேசிக் கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாகவும் பின்னர் காரசாரமாகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

பாலத்தினருகே காரை ஓரங்கட்டி நிறுத்தச் சொல்லி இறங்கியவர் காரை விட்டு சில அடி தூரம் சென்று பின் திரும்பி வந்து காரின் சாவியை எடுத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடியிருக்கிறார்.

ஏதோ விபரீதம் என்று உணர்ந்த டிரைவர் அவர் பின்னாலேயே ஓடி வந்து அவரைப் பிடித்திருக்கிறார். அவரைக் கீழே தள்ளி விட்ட மகாதேவன் ஓடிச் சென்று கூவம் ஆற்றில் குதித்திருக்கிறார்.

பகல் நேரத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்த பலர் வேடிக்கை பார்க்க அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னையில் உள்ள இன்ஜினியர்ஸ் இண்டியா என்கிற மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிநது வந்தார். சென்ற ஏப்ரல் மாதம் அவரது தாயார் இறந்து போனார். அதிலிருந்து அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அடிக்கடி எதற்கெடுத்தாலும் கோபமடைந்து சண்டை போட ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

போலிஸ் விசாரணை நடந்து வருகிறது. கணவர் இறந்த செய்தி கேட்டு நித்யஸ்ரீயும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.