சமர் விஷாலின் வெளிப்படையான பேச்சு..

samar-audio-launch-3dec12

நீண்ட இடைவெளிக்குப் பின் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் சமர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

ஹீரோயின்கள், இசையமைப்பாளர் யுவன் போன்றோர் வரவில்லை. நாயகன் விஷால் வந்து மனம் திறந்து விஷயங்களைப் பேசினார்.

படத்தின் இயக்குனர் ‘திரு’ தீராத விளையாட்டுப் பிள்ளை என்கிற சுமாரான படமே கொடுத்திருந்தும் அவருக்கு இந்தப் படம் இயக்க வாய்ப்பு கொடுத்ததன் காரணமென்ன என்று கேட்ட போது

இது வெற்றி தோல்விகளை வைத்து கொடுத்ததல்ல. அவர் சொன்ன கதை நன்றாக இருந்ததால் கொடுத்தேன் என்றார்.

உண்மையில் இந்தக் கதையை திரு ஆர்யாவுக்காக ரெடி செய்து வைத்திருந்தார் என்றும், அவன் இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த போது அவரைப் பார்க்க வந்த திருவை மடக்கி ஆர்யாவுக்கே தெரியாமல் இந்தக் கதையை கேட்டு தான் நடித்து விட்டதாகக் கூறினார்.

ஒரு வேளை படம் ஹிட்டானால் நல்ல படத்தை விட்டுவிட்டோமே என்று ஆர்யா வருத்தப்படுவார். படம் தோல்வியடைந்தால் ஒருவேளே இந்தப் படத்தை ஆர்யாவிடம் தள்ளியிருக்கலாமோ என்று நான் வருத்தப்படுவேன் என்று காமெடியாகச் சொன்னார்.

ஆர்யாவும், விஷாலும் நல்ல நண்பர்கள். அதனால் பிரச்சனை ஏதுமில்லை.

மேலும் படத்தின் நாயகிகளி்ல் ஒருவரான த்ரிஷா பற்றி கேட்ட போது ஓப்பனாகவே வழிந்தார் விஷால். ‘இதுக்கு முன்னாடி நான் நடிச்ச நாலு படத்துலயும் த்ரிஷாவை ரெகமண்ட் பண்ணினேன். பட் இந்தப் படத்துல தான் திருவா த்ரிஷாவை சூஸ் பண்ணினார்.’ என்றார்.

மேலும் த்ரிஷாவும், விஷாலும் நல்ல நண்பர்கள் என்றும், ஷூட்டிங் ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் இரண்டு பேரும் அரட்டை, சிரிப்பு என்றே நேரத்தை ஓட்டி ஒரு ஷாட்டை கூட ஓகே பண்ணவில்லை என்றும் மூன்றாவது நாள் தான் சீனை முடித்துக் கொடுத்தோம் என்றும் வெளிப்படையாகப் பேசினார்.

த்ரிஷாவுக்கு கல்யாணம்னு பேசிக்கிறாங்களே பாஸ்.. யார் கூடன்னுட்டு மட்டும் சொல்லாம விட்டுட்டாங்க..

உங்க வருங்கால மாமனார் ஒரு முன்னாள் மிஸ்டர் மெட்ராஸ்ன்றாங்களே.. தெரியுமா பாஸ்..

அவரு சினிமாவுலேயே நாட்டாமையா இருந்தவர்.. அவர் கூட வீணா சமர் பண்ணாதீங்க அப்புறம் என்னாகுமோ..?