கதை உதிக்குமிடம் புல்லட் பைக்..

santhakumar-bullet-bike-traveler

மௌனகுரு கலைஞரின் பேரன் அருள் நிதிக்கு மிக வித்தியாசமான மற்றும் பெயர் வாங்கித் தந்த படம். அதன் இயக்குனர் சாந்தகுமாரும் தனது முதல் படத்திலேயே ஆடியன்ஸை பிரமிக்க வைத்திருந்தார்.

இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வழங்குகிறது. இது பரிசோதனைப் படம்

என்று சொல்கிறார்கள். அதாவது லாபத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் வழக்கமான சினிமா அல்லவாம்.

சாந்தகுமார் தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து விட்டாராம். கதையை ரெடி பண்ண பல டைரக்டர்கள் ஊட்டி ,கொடைக்கானலில் ரூம் போட்டு, தண்ணி போட்டு, கு..டி போட்டு, தயாரிப்பாளர் தலையில் சட்டியை கவுத்துப் போட்டு கதை தயார் பண்ணுவார்கள். சாந்த குமார் கதை பற்றி யோசிக்க வேண்டுமென்றால் தான் வைத்திருக்கும் ராயல் என்பீல்டு புல்லட்டில் எங்காவது தூரமாக கிளம்பிவிடுகிறார்.

சமீபத்தில் ஒரு முறை இங்கிருந்து கோவாவுக்கு தனது பைக்கிலேயே சென்றாராம். சுமார் 2500 கிமீகள் தூரம் இருக்கும் கோவா. வழி நெடுக பல தரப்பட்ட மாநிலங்களையும், மக்களையும், பரந்த நிலப்பகுதியையும் கண்டபடியே தனது கதைக்களத்தையும் அமைத்திருக்கிறார்.

உங்களோட அடுத்த படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கிறோம் சாந்தகுமார். ராயலா என்பீல்டில் வந்து இறங்குங்க.