‘பாக்குறதுக்கு நீங்க ரெடியா?’- தனது ‘மறுபக்கத்தை காட்டத்துடிக்கும் மூன்றெழுத்து நடிகை

tris

 தி’ என்ற எழுத்தில் துவங்கி ‘ஷா’ என்ற எழுத்தில் முடியும் மூன்றெழுத்து நடிகையின் கிழக்குக் கடற்கரைச்சாலை பங்களாவை நகரமைப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்திருப்பதாகவும், அதை மூன்றே தினங்களில் முறியடித்துக்காட்டுவதாக நடிகை அதிகாரிகளிடம் உரியடித்திருப்பதாகவும் நம்பத்தகுந்த

வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘என்னோட பங்களாவுக்குத்தான் உன்னால சீல் வைக்க முடியும். ஆனா எனக்கு வைக்க முடியுமா? என்னோட ஒரு பக்கத்தைதான் நீங்க பாத்திருக்கீங்க. இன்னொரு பக்கத்தை கூடிய சீக்கிரம் காட்டுறேன்’ என்று அந்த நடிகை பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, பெரிய இடங்களை சந்திக்க பறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாமல்லபுரம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய, ஆலிவ் பீச் பகுதியில், கட்டப்பட்டு வரும் ஏராளமான ஆடம்பர பங்களாக்கள், நகரமைப்பு விதிகளை மீறி கட்டப்பட்டு வருகின்றன என பல்வேறு தரப்புகளிலிருந்து புகார் செய்யப்பட்டிருந்தது. கடற்கரை, நீர் நிலை புறம்போக்கு நிலங்களில், விதிமுறைகளை மீறி இந்த பங்களாக்கள் கட்டப்பட்டவை என விசாரனையில் தெரியவந்தது.

முட்டுக்காடு பகுதி மக்கள், இந்தப் பங்களாக்கள் சினிமா துறையினர், தொழில் துறையினர் என, பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்காக, விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக  நகரமைப்புத் துறையிலும், வருவாய் துறையினரிடமும் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார்கள் குறித்து, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள், திருப்போரூர் தாலுகா அலுவலக அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டபோது பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

திரைத்துறையைச் சேர்ந்த நம்பர் ஒன் நடிகர் நடிகையரில் தொடங்கி பார்ட்டிகள் கொடுத்தே பலகோடிகள் சம்பாதித்த பலான பார்ட்டிகள் வரை பலரும் இங்கே பங்களாக்கள் கட்டி, அத்துமீறலில் அட்டகாசம் புரிந்துகொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நடந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் மேற்படி நடிகை உட்பட திரையுலகின் பல முன்னணிகள் மாட்டியிருக்கிறார்களாம்.

ஆனால் ஒன்றிரண்டு நாட்களில் செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் சகஜநிலை திரும்பி, பழையகூத்துக்கள் ஆரம்பமாகிவிடும் என்று நம்பியே தீரவேண்டிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி;கு:அந்த மூன்றெழுத்து நடிகையின் படம் அவசரத்துக்கு கிடைக்காத்ததால், சும்மா ஒரு அவசரத்துக்கு திரிஷாவின் ஸ்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.