’அத்தாச்சி வடிவேலு விசாலாட்சிக்கு அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் அனுப்பீருக்காக’

vadi1

நடிகர் வடிவேலுவின் ‘டிராஜடி டைம்’ இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லைபோல் தெரிகிறது.  ‘இந்த வந்துரும், அந்தா வந்துரும் என்று பந்தாவாக படங்களுக்கு காத்திருந்தது போய், காஞ்ச கருவாடு கூட கிடைக்காமல், வாடி இருக்கும் கொக்காய் வதங்கிப்போய் இருக்கிறாராம் வடிவேலு.
நிலைமை இப்படியிருக்க, வெந்த புண்ணில் வடிவானவேலைப் பாய்ச்சிய கதையாக, கடந்த சில தினங்களுக்கு

முன்பு தனது மனைவி விசாலாட்சி பெயரில் வாங்கிப்போட்ட நிலத்துக்கு வந்த வக்கீல் நோட்டீஸைப் பார்த்து கதறி அழுதபடி இருக்கிறாராம் கைப்புள்ள.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர விவசாயிகளுக்கு விற்று விட்டனர். அதில் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தார்கள்.

பிறகு அந்த இடங்களை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு ஆந்திர விவசாயிகள் விற்க ஆரம்பித்தனர்.  ‘அடடா சல்லிசான விலையில் நிலம்  விலைக்கு வருகிறதே “ என்று சப்புக்கொட்டியபடி, அதில் பல ஏக்கர் நிலங்களை நடிகர் வடிவேலு தன்  மனைவி விசாலாட்சி பெயரில் வாங்கிக்குவித்துள்ளார். அப்படி வாங்கிய இடத்தில் பண்ணை வீடுகள் கட்டி சினிமா டிஸ்கசனுக்கு விட வடிவேலு முடிவெடுத்துருந்ததாக தெரிகிறது.

 இந்நிலையில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 19 பேருக்கு அரசு வருவாய்த்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் பட்டியலில் வடிவேலு மனைவி விசாலாட்சியும் இருக்கிறார். அரசு புறம்போக்கு நிலத்தை வரும் 15-ந்தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீசில் படப்பை வருவாய் துறை துணை ஆய்வாளர் சின்னத்துரை குறிப்பிட்டு உள்ளார். வக்கீல் நோட்டீஸைப் பார்த்ததிலிருந்து டென்சனான விசாலாட்சி அத்தாச்சி, ‘ இதுவரைக்கும் நீ சினிமா பொண்டாட்டிகள்கிட்ட அடிவாங்குனதைத்தான் ஊர் உலகம் பாத்துருக்கு. ஒரிஜினல் பொண்டாட்டி அடி எப்பிடி இருக்கும்னு அவிங்களப் பாக்க வச்சிராத’ என்று சீறிச் சினந்துகொண்டிருக்கிறாராம்.

இதனை ஒட்டி,மிளகு, பனங்கற்கண்டு போன்ற தொண்டைக்கு இதமான சில அயிட்டங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது நிலமில்லையே’ பாடலை வடிவேலு மிக தீவிரமாக பிராக்டீஸ் பண்ணி வருவதாக தெரிகிறது.