’கல்யாணத்தை கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?’ அனுஷ்கா ‘ஐ’டியா

anushka-1

இப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் காட்சி போடப்படுகிற பிரிவியூ தியேட்டர்கள் இருக்கிற ஏரியாக்களில் சினிமா நட்சத்திரங்களை, அதுவும் குறிப்பாக நடிகைகளை, பார்க்க முடிவதே அபூர்வம். ஆனால் வெந்த புண்களுக்கு மஞ்சள் தடவும் எண்ணத்துடனோ, அல்லது அண்ணனும் தம்பியும் அடிக்கடி ஹீரோயின் சான்ஸ் தருகிறார்கள் என்ற நன்றி உணர்ச்சியாலோ ‘அலெக்ஸ் பாண்டியன்’ பத்திரிகையாளர் காட்சி நடந்த ஃபோர் ஃப்ரேம்ஸ்

தியேட்டருக்கு நடிகை அனுஷ்கா நேற்று தரிசனம் தந்திருந்தார்.
முன்பெல்லாம் இதுபோன்ற இடங்களுக்கு செல்லும் போது, நல்ல தாராள உள்ளத்துடன் கிளாமராக உடை அணியும் அனுஷ்,  நேற்று, முழுசாய் சாரி கட்டிக்கொண்டு ரொம்ப ஸாரியாக காட்சி அளித்ததை, பத்திரிகையாளர்கள் பலரும் கவலையோடு கமெண்ட் அடித்தனர். படத்தின் இடைவேளையின் போது, திரைக்கு முன்னால் நாயகன், கார்த்தி, 2013-n தவிர்க்க முடியாத இயக்குனர் சுராஜ் ஆகியோருடன் காட்சி அளித்து, கைகூப்பி விடைபெற்றார்.
இது திரைக்கு முன்னே நடந்த சம்பவம். இதே சமயத்தில் திரைக்குப் பின்னேயும் ஒரு சம்பவம் நடந்தது.
 தியேட்டருக்குள் காலடி எடுத்து வைத்த சமயத்திலிருந்தே அனுஷ்காவின் கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தன. அவர் வேறு யாருமல்ல,மிரட்டல் குரலுக்காக ‘டி.டி.எஸ்’ சவுண்டு’ என்று அனுஷ்காவல் பட்டப்பெயர் வைக்கப்பட்டுள்ள,  ஃபோர் ஃப்ரேம்ஸ் கல்யாணம்தான். பத்திரியாளர்களுக்கு வணக்கம் வைத்த கையோடு, அவரைத்தேடிக் கண்டுபிடித்த அனுஷ்கா, ‘சார் வந்ததுலருந்து உங்களைத் தேடிக்கிட்டே இருக்கேன். தியேட்டரை விட்டுட்டு எங்கே சார் போனீங்க’ என்று செல்லமாய் கோபித்துக்கொண்டு, ‘அவரது கைகளைப் பிடித்தபடி ஸ்டில்ஸ் எடுத்துக்கொள்ளலானார். அவர்கள் இருவரும் நின்ற நெருக்கத்தைப் பார்த்து படம் எடுத்தவரின் காதில் புகை வர ஆரம்பித்தது.
அவ்வளவுதான் அதற்கு மேல் அங்கு எவ்வித சம்பவங்களும் நடக்கவில்லை.அதே போல் தலைப்பைப் படித்துவிட்டு இனிமேல் யாராவது கிசுகிசு  எழுத ஆரம்பித்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது.