வருகிறது ஜூராசிக் பார்க் – 4

jurassicpark-4-news

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க் முதல் பாகம் 1993ல் ரிலீசானது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் புதிய பரிமாணங்களைப் புகுத்தி  அழிந்து போன டைனோசார்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டது அந்தப் படம்.

புகழ் பெற்ற எழுத்தாளர் மைக்கேல் கிரிச்டனின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்

3 பாகங்கள் வெளிவந்தது.

கடைசிப் பாகம் வந்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் மைக்கேல் கிரிச்டனின் ஜூராசிக் பார்க் நாவல்களின் தொடர்ச்சியை வைத்து இப்படத்தின் 4ம் பாகம் தயாரிக்கப்பட இருக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் சொந்த நிறுவனமான ட்ரீம் வொர்க்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு திரைக்கதை எழுத ரிக் ஜாபா மற்றும் அமெண்டா சில்வர் என்கிற புகழ் பெற்ற இரு திரைக்கதை எழுத்தாளர்களை பணிக்கமர்த்தியுள்ளது.

3D யில் தயாராகவிருக்கும் இப்படத்தை ஸ்பீல்பெர்க் இயக்கப்போவதில்லையாம். வெறும் தயாரிப்பாளர் மட்டுமே.

இப்படம் 2014 ஜூன் 13 ஆம் தேதி அதாவது அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.