’சொன்னாப்புரியாது’ மும்பைக்குள் நுழைய தமிழ்ப்பட தயாரிப்பாளருக்கு தடை

siva

 இடையில் சின்னெடுங்காலமாக சினிமா ஃபங்க்‌ஷன்கள் அட்டெண்ட் பண்ணுவதை அறவே அவாய்ட் பண்ணி வந்த ’மோர்பீர்’ மற்றும் யூடிவி மோஷன் பிக்‌ஷர்ஸ் தனஞ்செயன், தனது தீரா கலா ஆசையால், மீண்டும் விழா நாயகனாக உலா வர ஆரம்பித்துவிட்டார்.

இன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்த மிர்ச்சி சிவாவின் ’சொன்னாப்புரியாது’ ஆடியோ ரிலீஸ்

விழாவில் தியேட்டர் வாட்ச்மேனுக்கும் முன்பாகவே ஆஜராகியிருந்த தனஞ்செயனைத்தான். ஹீரோ சிவாவும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அவரது ரேடியோ ஜாக்கி நண்பர் ஜக்கிவாசுதேவும் இட்லிக்கு சட்னியாக தொட்டுக் கொண்டனர்.

‘ நான் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும்போது யாரையுமே கட்டாயப்படுத்தி அழைக்கலை. அதே மாதிரிதான் தனஞ்செயன் சாருக்கும் நேத்து போன் பண்ணினேன். போனை எடுத்த அவர் ,’ சிவா இவ்வளவு நேரமா உன் போனுக்காகத்தான் வெயிட் பண்றேன். நீ ஃபங்சனுக்கு கூப்பிடாம இருந்தா, விடியக்காலை ஃப்ளைட்ல மும்பை போறதா இருந்தேன். என்ன பண்றது? நீ இப்ப போன் பண்ணி கூப்பிட்டுட்டே. அதனால அந்த ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிட்டு வேற ஃப்ளைட்ல போயிக்கிறேன்னு சொல்லி இங்க வந்துட்டார்’ என்று மொத்த சத்யம் தியேட்டரும் அதிரும்படி தனஞ்செயனை ‘ஓட்டினார்’ சிவா.

‘மதுரைக்குள்ள நுழையக்கூடாதுன்னு மருத்துவர் அய்யாவுக்கு கலெக்டரய்யா தடை விதிச்சிருக்கிற மாதிரி, அட்லீஸ்ட் ‘சேட்டை’ யாவது ஹிட் ஆகுறவரைக்கும் நீங்க மும்பைக்குள்ள நுழையக்கூடாதுன்னு ‘யூடிவி’க்காரங்க தடை விதிச்சிருக்குறதா ஒரு தகவல் நடமாடுதே தனஞ்செயன் சார். பிறகெதுக்கு ஃப்ளைட் டிக்கட் பில்ட்-அப் எல்லாம்?