’ப்ரியா ஆனந்துக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் நடுவுல கொஞ்சம் வெக்கத்தைக் காணோம்’

abcd2

’வாமனன், ‘குளிர்100’ படங்களின் நாயகி ப்ரியா ஆனந்த் குறித்து கதகதப்பான செய்திகள் நடமாட ஆரம்பித்து விட்டன.சில மாதங்களுக்கு முன்புவரை ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ என்ற ஒரே படத்தில் நடித்துக்கொண்டு ‘படு பிசியாக’ மும்பையில்

திரிந்துகொண்டிருந்த ப்ரியா, அடுத்த இந்திப்படத்தை எதிர்பார்த்து ஏமாந்திருந்தவேளையில்தான் ‘எதிர்நீச்சல்’ என்ற தனது சொந்தப்படத்துக்கு ப்ரியாவின் கார் டோரைத்தட்டினார் தனுஷ்.
‘இப்போதைக்கு பட்டும் படாம, தொட்டும் தொடாம சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடி. நான் அடுத்து டைரக்ட் பண்ணி ஹீரோவா நடிக்கிற படத்துக்கு நீதான் எனக்கு எல்லாம்’ என்ற வாய்மொழியுடன் தான் எதிர்நீச்சல்’ போடவே ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ்.
ஆனால் காத்திருந்தவன் மேட்டரை நேத்து வந்தவன் தள்ளிட்டுப்போற கல்சராச்சே நம்ம தமிழ் கல்ச்சர்?
ஆரம்பத்தில் ‘எதிர்நீச்சல்’ கதைக்காக கொஞ்சம் நட்பாக பழக ஆரம்பித்த சிவகார்த்திகேயன், ப்ரியா ஜோடி, ‘அந்த தனுஷ் மேட்டரை ஃப்ரியா விடு’ என்ற படி, மிகவும் நெருங்கி, கிறங்கிப் பழக ஆரம்பித்துவிட்டார்களாம்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இயக்குனர் செந்தில், சி.கா.வுக்கு போனைப்போட்டு, ‘சார் அந்த டூயட்டை அந்தமான்ல ஷூட் பண்ணா நல்லாருக்கும்னு நெனக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டபோது, ‘ நீங்க நினைக்கிறீங்க. நாங்க அங்கதான் இருக்குறோம்.  யூனிட்டோட கிளம்பி வாங்க சார்’ என்றபோது அதிர்ந்துவிட்டாராம்.
‘ஸோ இப்பல்லாம் கேமரா இல்லாமலே ‘எதிர்நீச்சல்’ போட ஆரம்பிச்சிட்டீங்க சி.கா. நல்லா வந்துட்டீங்க பாஸ்.