‘ ஏன்னா நாட்டுல நயன்தாராக்கள் நடமாட்டத்துக்கு எப்பவே பஞ்சமில்ல,.’

shobi-1

ரஜினி கமலில் துவங்கி சினிமாவில் புதுசாக காலடி எடுத்துவைக்கும் நண்டு, சிண்டுகள் வரை பெண்டு கழட்டுபவர் டான்ஸ் மாஸ்டர் ஷோபி. ஏழெட்டு வருட அழிச்சாட்டியத்துக்குப் பிறகு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரு வழியாக அவரது ‘ஆட்டம்’ முடிவுக்கு வந்தது. யெஸ், அவரது காதலியும் சக நடனக் கலைஞருமான

லலிதா மாஸ்டரைக் கரம்பிடித்தார் ஷோபி.
‘கல்யாணத்துக்கு கொஞ்சநாள் முந்திவரைக்கும் நாங்க லவ் பண்ணவே இல்லை பாஸ். சுத்தி இருந்தவங்க, வதந்திகளைக் கிளப்பி எங்கள லவ் பண்ண வச்சி அதை கல்யாணம் வரைக்கும் கொண்டுவந்து விட்டுட்டாங்க’ என்று தான் காதலிக்காத காதல் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் ஷோபி மாஸ்டர்.
‘’பிரபுதேவா மாஸ்டர்கிட்ட அசிஸ்டெண்ட்ஸா வேலைபாத்த காலத்திலிருந்தே நானும் லலிதாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.  எங்களுக்குள்ள லவ்கிவ்வுன்னு எதுவும் கிடையாது. ஆனா எங்களைச் சுத்தி இருந்த எல்லாரும் நாங்க சீரியஸா லவ் பண்றதா பீதியைக் கிளப்பி விட்டுட்டாங்க. இல்லைன்னு நாங்க எவ்வளவோ சொல்லியும் அவிங்க கேக்குறதாயில்லை.அடுத்த கொஞ்ச நாள்ல, சரி இதுவரைக்கும் இல்லைன்னா பரவாயில்லை. இனியாவது லவ் பண்ண ஆரம்பிக்கலாமுல்லன்னு சிபாரிசு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இன்னொரு பக்கம் எங்க குடும்பத்து உறவுகளும், ‘லலிதாவை லவ் பண்ணி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க. அட நம்ம லவ்வுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கேன்னு அப்புறம்தான் நானும் லலிதாவும் பேசி ஒருவழியா கல்யாணம் வரைக்கும் வந்தோம்’’ என்கிறார் ஷோபி மாஸ்டர்.
அவரது வீட்டுக்காரம்மா லலிதா மாஸ்டரும் செம ஸ்போர்ட்டிவ். ‘உங்க கணவருக்கு, இவரோட குருநாதர் பிரபுதேவா மாதிரியே, ஹீரோ வாய்ப்பு வந்தா நடிக்க அனுமதிப்பீங்களா?’ என்றால் ,’’ ஓ யெஸ் வொய் நாட்?’ என்கிறார்.
குருநாதர்கள் வழியில ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குமேல போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால பிரபுதேவா பாணியை ஹீரோ ஆகுற லெவலோட நிறுத்திக்கங்க மாஸ்டர். ஏன்னா நாட்டுல நயன் தாராக்கள் நடமாட்டத்துக்கு எப்பவே பஞ்சமில்ல.