Uthayanithi-1

ஏறத்தாழ ஒரு பெரிய படப்பிடிப்புக்கான செட்அப் களோடு தனது அடுத்த படமானஇது கதிவேலின் காதல்படத்துக்கு நயன்தாராவோடு மூன்று தினங்கள் ஃபோட்டோ ஷூட் நடத்திய உதயநிதி ஸ்டாலின், ஊர்கண் பட்டுவிடும் என அஞ்சியோ என்னவோ, ஒன்றிரண்டு ஸ்டில்களையே ரிலீஸ் செய்திருக்கிறார்.

சுந்தரபாண்டியன்படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன் மற்றும் சந்தானம் நடிக்கும் படம்இது கதிர்வேலின் காதல்’. ஏறத்தாழ ஒரிஜினல் கேரக்டரை ஒட்டி வரும்படி, வேலைவெட்டி இல்லாமல் ஊரைச்சுற்றும் வாலிபனாக உதயநிதி நடிக்கும் இப்படத்தில், அவரது மதுரைக்கார மதுரமான காதலியாக நயன்மதுரா நடிக்கிறார்.

சென்னையில மட்டும் இல்ல, மதுரையிலயும் இனி எங்க கொடிதான் பறக்கப்போகுதுஎன்ற டயாலக்குடன் காதலியைத்தேடி மதுரை செல்லும் சென்னை பாய் உதயநிதி, அங்கு பெரியப்பா அழகிரி மற்றும் அவரது பிள்ளை தயாநிதி அழகிரி ஆகியோரின் சப்போர்ட் இன்றி நயன்தாராவின் கரத்தை எப்படிப்பற்றினார் என்பதுதான் கதை.

அஜீத், ஆர்யா, விஸ்ணுவர்த்தன்களின் படப்பிடிப்பில் மும்பையில் நயன் பிஸியாக இருப்பதால், அங்கிருந்து அவர் திரும்பியதும், இம்மாத இறுதியில் மதுரையில் படப்பிடிப்பு தொடங்கி, ஏப்ரல் அல்லது மே மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது.

பாடல் கம்போஸிங் அவ்வளவையும் பாரீஸில் வைத்துக்கொண்டு, ஹாரிஸ் செயராசு இசையமைக்கிறார்.

தனது முதல் படமானஒரு கல் ஒரு கண்ணாடியில் போட்டது போலவே, தனது தாத்தா மு.கருணாநிதியின் ஆலோசனையின் படியே,’கதிர்வேலின் காதலிபடத்துக்கு நயனை ஹீரோயினாகப்போட்டாராம் உதயநிதி.

கிசுகிசு ஏரியாக்கள் ட்ரையா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஸ்டில்ஸ் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்.Uthayanithi-2

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.