’அலெக்ஸ்’ போண்டியானதற்கு இயக்குனர் சுராஜ்தான் காரணமாமாம்’-வெங்ட்விட் பிரபு

venkatbrabhu

கிசுகுசுக்கள் எழுதும் சினிமா பத்திரிகையாளர்களின் பொழப்பு, இந்த ட்விட்டரால் சீக்கிரமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் போல் இருக்கிறது. ஏனெனில்,இப்போதெல்லாம் சினிமாக்காரர்கள் , சகல பரபரப்பான செய்திகள் குறித்தும், அவர்களுக்குள்ளாகவே ட்விட்டரில் சண்டை போட்டு கடைசியில் ஒரு வழியாக சமாதானத்துக்கும் வந்து விடுகிறார்கள்.

அப்பாவின்’நேற்று போய் நாளை வராதே’ படத்துக்காக சாந்தனு பாக்கியராஜ், வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்க, மற்றொரு புறம் தனது ‘பிரியாணி’ பட ஹீரோவின் படம் என்ற ஒரே காரணத்துக்காக ஏற்கனவே ஊத்தி மூடப்பட்ட ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்துக்காக ட்விட்டரில் தனியாக அமர்ந்து மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறார் சென்னை-28ன் மொன்னைப்பையன் வெங்கட் பிரபு.
‘அலெக்ஸ் பாண்டியன்’ பட கேரக்டருக்கு நடிகர் திலகம் கார்த்தி என்ன நியாயம் செய்யவேண்டுமோ அதைச் செய்துவிட்டாராம். தயாரிப்பாளரும் விளம்பரத்துக்கு தடபுடல் செலவு செய்துவிட்டாராம். அதைத்தாண்டி படம் நொண்டி அடித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் இயக்குனர் சிராஜ்’ என்பது வெங்கட் பிரபுவின் ட்விட்.
ட்விட்டர் சமாச்சாரம் குறித்தெல்லாம் இயக்குனர் சுராஜுக்கு சாமி சத்தியமாய் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையென்பதால்,அவர் தரப்பில் மயான அமைதி. ஆனால், ஏற்கனவே ‘சமர்’ ரிலீஸுக்கு இடைஞ்சல் செய்ததாகக்கூறி சில குடைச்சல்களைக் கொடுத்துக்கொண்டிருந்த விஷால் கோஷ்டியினர்,’ அப்ப படத்தோட வெற்றி தோல்வியில ஹீரோக்களுக்கு பங்கே இல்லையா? என்று சில கேள்விகளை எழுப்ப, ‘இருங்க இதுக்கு கார்த்தி கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு பதில் சொல்றேன்’ என்றபடி தற்காலிகமாய், நாற்காலியை விட்டு நகர்ந்திருக்கிறார் இந்த சென்னை 420 அண்ட் 8 பையன்.
வெங்கட் பிரபுவுக்கு, ஒரு நடிகை அளவுக்கு, ட்விட்டரில் ஒரு லட்சத்து 15,040 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.