விக்ரமுக்கு மூன்று மாத ஓய்வு; வெறுப்பின் உச்சத்தில் ஷங்கர்

emi4

இயக்குனர் ஷங்கருக்கும் விக்ரமுக்கும் இடையில் நிலவி வரும் கருத்துவேறுபாடுதான், இன்றைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் ஆம்லெட். ‘ஐ’ படத்தை துவங்கும் போது, அதை முடிக்காமல், பெண்டிங்கில் இருக்கும் ‘கரிகாலன்’ ‘டேவிட்’ போன்ற படங்களில்

கால் வைக்கமாட்டேன்’ என்று சத்தியம் செய்யாத குறையாக வாய்ப்பை வாங்கிய விக்ரம், படத்தில் கமிட் ஆனபிறகு முற்றிலும் வேறுமாதிரியாக நடந்துகொள்ள ஆரம்பித்து விட்டாராம்.
முதல் விதிமீறலாக, ஜிம்முக்கு போய் உடலைக்குறைக்க ஷங்கர் கொடுத்த மூன்று மாத ஓய்வை, ரிலையன்ஸ் நிறுவனம் பணத்தை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருந்தது என்ற ஒரே காரணத்துக்காக ‘ஐ’ கெட்டப்பிலேயே நடிக்கக் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் ‘கரிகாலன்’ தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அதிகமாக ‘குனிந்து விட்டார்கள்’ என்பதால் ‘டேவிட்’ படத்துக்கு காட்டிய கரிசனத்தை விக்ரம் கரிகாலனுக்கு காட்டவில்லை.
அப்படம் முடிந்த பிறகாவது, பார்க்க நோயாளி போல் காட்சியளிக்கும், ‘ஐ’ கெட்டப்பில் விழாக்களில் கலந்துகொள்ளவேண்டாம்’ என்று ஷங்கர் கேட்டுக்கொண்டதையும் காதில் வாங்காமல் உதாசீனப்படுத்தினார் விக்ரம்.
கடந்த இரு மாதங்களில் ‘டேவிட்’ நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே இருமுறை, மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ‘ வொய் யூ ஆர் ஸோ மச் மெலிஞ்சிங் ஃபார் த ‘ஐ’ கெட்-அப்? என்று பலரின் கேள்விகளுக்கு ஆளாகிவருகிறார்.
இதனால் வெகுண்டு வெக்ஸ் ஆகிப்போன ஷங்கர் ’அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்கட்டும். ஐ யாம் யாருன்னு காட்டுறேன்’ என்று உறுமிக்கொண்டிருக்கிறாராம்.