‘ஐவாட்ச்’சிற்கான காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது

apple-introductes-iwatch

கூகுள் நிறுவனத்தின் க்ளாஸ் ப்ராடக்ட்டுக்கு இணையாக ஆப்பிள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய கருவி தான் ஐவாட்ச்(iWatch). இதில் AMO LED டிஸ்பிலே, சூரியத் தகடுகள் மற்றும் இயக்கவியல் சார்ஜர்  (solar panels and a kinetic charging mechanism) போன்ற புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தபட்டுள்ளது.

ஆகஸ்டு 2011 ல் இதற்கான காப்புரிமை பெற்ற ஆப்பிள் கம்பெனி தனது புதிய உற்பத்தி பொருளான ஐவாட்ச்  யை  இப்போது வெளியிட இருக்கிறது.
 
 இதில், வேறு ஆப்பிள் டிவைஸ்களில் உள்ள கான்ட்டன்ட் பகுதியை அந்த டிவைஸ்களில் இருந்து வயர்லெஸ் மூலம் பெற்று காட்ட இயலும். கையில் வாட்ச் போல அணிந்து கொள்ளலாம். இதை பிரவுஸராகவும், டெக்ஸ்ட் நோட்டிவிக்கேசன், மற்றும் சாதாரண போன் கால்கள் செய்யவும் பயன்படுத்தலாம்.

இதில் கைனடிக் எனர்ஜி கேதரிங் டெக்னால்ஜி மற்றும் சோலார் பேனல் உபயோகபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மணிகட்டில் வாட்சாக பயன்படுத்தும் போது மணிக்கட்டின் அசைவுகளிலிருந்தே பாட்டரியை சார்ஜ் செய்து கொள்ளவும், கையின் அசைவுகளுக்கேற்ப திருப்பி பார்க்கும் வசதியும் பெற்றுள்ளது. இதற்கு தேவையான பவர் எனர்ஜி வாட்ச்ன் சோலார் பேனல் தயாரிக்கும் ஆற்றலிலிருந்தே போதுமானதாக கிடைக்கும். மேலும் AMOLED டெக்னால்ஜியால் டிஸ்பிலே பவர் பாதுகாக்க படுகிறது.
 
புதிய  Browser உலகம் தயாராகிறது.
 
–உழவன்