சந்திராவில் ரசிகர்களை ம(க)திகலக்கும் ஷ்ரேயா

chandra-shreya-prem-audio-launch

ரூபா ஐயரின் இயக்கத்திலும் தயாரிப்பிலும், ஷ்ரேயா சரணின் கவர்ச்சிமிகு நடிப்பிலும் உருவாகியுள்ள சந்திரா திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 28/02/2013 அன்று சென்னையில் நடந்தது. பலர் வாழ்த்திப் பேசினர்.

எப்போதும் போல கலகலப்பாக பேசிய சின்ன கலைவாணர் விவேக், ”பொதுவாக எங்களைபோன்ற காமெடி நடிகர்களை வெளிநாட்டு படபிடிப்புக்கு விட்டு சென்றுவிடுவார்கள், ஆனால் ரூபா என்னிடம் ‘நாம் வெளிநாட்டில் படபிடிப்பு நடத்த உள்ளோம்’ என கூறியபோது மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தேன்..இந்த படம் அருமையாக வந்திருகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறினார்..

படத்தின் கதாநாயகி ஷ்ரேயா சரண் பேசுகையில், ”எனக்கு இந்த படம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி..இப்படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்த என்னை  நிஜ ராணியை போலவே பாத்துக்கொண்டார்கள் இயக்குனர் ரூபா அவர்களும் பட குழுவினரும்..இப்படம் மூலம் எனது நெருங்கிய தோழியாகிவிட்ட ரூபா ஐயருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என்றார்.
 
படத்தின் நாயகன் திரு.பிரேம் பேசுகையில், ” நான் ஒரு கன்னட நடிகராக இருந்தாலும் சென்னைக்கு என் மனதில் ஓர் தனி இடம் உண்டு..நான் பெற்ற முதல் பிலிம் film fare விருது இந்த மண்ணில்தான்..சந்திராவின் மூலம் தமிழிலும் ஓர் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்..”

படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரூபா ஐயர் பேசுகையில்,” இந்த படத்துக்காக நான் பட்ட சிரமங்களும் ,சிந்திய வியர்வைகளும் மிகவும் அதிகம்..ஆனாலும் படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது..ஸ்ரேயாவின் மயங்கவைக்கும் அழகும் நடிப்பும் படத்துக்கு பலம்..இந்த படத்திற்கு பிறகு கதாநாயகன் பிரேமுக்கு தமிழில் நல்ல பட வாய்ப்பு  அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.. விவேக் அவர்களின் நகைச்சுவையும், கணேஷ் வெங்கட்ராமனின் துடிப்பான நடிப்பும் இப்படத்தை மெருகேற்றி உள்ளன..இசையமைப்பாளர் கௌதம் ஆறு மனதை தொடும் பாடல்களை தந்துள்ளார்..இவரது பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்தின் தூண்களாக அமைந்துள்ளன..எனது ‘சந்திரா’ வெற்றி பெற உங்கள் எல்லோரின் அன்பும் ஆதரவும் தேவை ” என்று கூறினார்.

சந்திரா படத்தின் நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கலைபுலி தாணு, பி.எல்.தேனப்பன், படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோரும் பாராட்டிப் பேசினர்.