கன்னியாகுமரியிலிருந்து மீண்டும் காஷ்மீருக்குத் தாவும் மணிரத்னம்

maniratnam-amirkhan-kareena-lajjo

மணிரத்னத்தின் கடல் ரசிகர்கள் மத்தியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாமல் கடலில் போட்ட கல்லாய் ‘தேமே’ என்று போனவுடன் மணிரத்னம் நெக்ஸ்ட் கொஞ்சம் ரெஸ்ட் என்று கொஞ்சநாள் ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டார்.

காதல் அல்லது சமூக மோதல் இவற்றில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தே பெரும்பாலும் படம் எடுக்கும் மணி கடந்த இருமுறையும் காதலை வைத்தே படம் எடுத்து அவை ஊத்தி மூடிக் கொண்டதால் இப்போது தனது அடுத்த அஸ்திரமான அரசியல் மோதலைப் பற்றி எடுக்க கிளம்பிவிட்டார்.

கன்னியாகுமரியில் அவர் பிடித்த ட்ரெய்ன் நேரே காஷ்மீரில் போய் நிற்கிறது. மணிரத்னம் ஹிந்தியில் ஏற்கனவே 2007ல் அமீர்கானும், கரீனா கபூரும் நடிக்க இருக்கும் லஜ்ஜோ என்கிற படத்தை ஆரம்பித்திருந்தார். உருது எழுத்தாளர் இஸ்மத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இக்கதை இந்திய-பாக் பிரிவினையையொட்டிய காலத்தில் நடக்கும் காதல் கதை. பீரியட் படம் என்பதால் இந்தியுடன் உருதிலும் காட்சியமைப்புக்களை எழுத திறமையான வசனகர்த்தா கிடைக்காததால் திரைக்கதையை எழுதிமுடிக்க இயலாமல் போகவே அப்படம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அதை மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ள மணிரத்னம் பாலிவுட் எழுத்தாளர் ரெனில் டிசில்வாவுடன் இணைந்து ஸ்கிரிப்டை எழுதியிருக்கிறார். ராவணன் போலவே ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராக இருக்கிறது. தமிழில் அமீர்கானுக்குப் பதிலாக வேறு தென்னிந்திய ஹீரோ ஒருவரை போடலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறாராம் மணி.

முதன் முறையாக ஒரு நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் ரெடி செய்யும் கதை இது. இதிலாவது சின்சியராக அந்தக் காலத்தின் நிகழ்வுகளை முன்வைக்கிறாரா? இல்லை வழக்கம் போல இந்தியாக்காரன் அல்லது பாக்கிஸ்தான்காரன் என்று யார் தாலியையாவது அறுக்கப் போகிறாரா ?

எல்லாம் அந்த ராவணனுக்கே வெளிச்சம் ?