ஐபிஎல்லுக்கு அழைத்து ஜெ.லோவை மூக்கறுத்த ஷாருக்

sharuk-ipl-jennifer-lopez-issue

என்ன இது ? ஜெ.லவுக்குப் பதில் ஜெ.லோ என்று போட்டிருக்கிறதோ என்று குழம்பிவிடாதீர்கள். ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ்தான் செல்லமாக ஜெ.லோ என அழைக்கப்படுபவர். அவர் தான் நடிகர் ஷாருக்கானின் மீது இப்படி குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் மேட்ச்சின் ஆரம்ப நாள் விழாவில் விருந்தினராக பங்கேற்பதற்காக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ்ஸை ஷாருக்கானின் ரெட்சில்லிஸ் நிறுவனம் புக் செய்ததாகவும், கடைசி நேரத்தில் அவர் வர இயலாது என மறுத்ததாகவும் கூறப்பட்டது.

ஜெனிபர் லோபஸ் பறந்து வர தனி விமானம் மற்றும் பணியாட்கள், உயர்ந்த ரெஸ்ட்டாரண்ட் தங்குமிடம் என்று பல சலுகைகளைக் கேட்டதாகவும், அவற்றுக்கு ஒப்புக்கொள்ள இயலாததால் கடைசி நேரத்தில் அவர் வரமறுத்ததாகவும் கூறப்பட்டது.

இதை மறுத்திருக்கும் ஜெ.லோ. தன்னை இவ்வாறு அழைத்து, வருகை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளையும், வைக்கப்பட்ட நிபந்தனைகளையும் வேண்டுமென்றே மீடியாக்களுக்கு லீக் செய்து  ஷாருக்கானின் நிறுவனம் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

கொல்கத்தா ரைடர்ஸ் அணியின் ஓனரான ஷாருக்கான் ஒரு தொடர் புகைப்பாளர்(அதாங்க செயின் ஸ்மோக்கர்). இதனாலேயே சென்ற ஐபிஎல்லில் வான்கடே ஸ்டேடியத்தில் அவருக்கும் பாதுகாவலர்களுக்குமிடையே பிரச்சனை எழுந்தது.

இவ்வாறு ஒவ்வொரு ஐபிஎல்லிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் மீடியாக்களுக்கு மொறுக்குத் தீனி தந்து பரபரப்பாகிவிடுகிறார் ஷாருக். பின்னே !! கலெக்ஷன் களை கட்ட வேண்டாமா?