vijay-dances-for-thalaiva-song-13apr13

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் நடிக்கும் தலைவா படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இதில் ஜி.வீ.பிரகாஷின் இசையமைப்பில் ‘தமிழ்ப் பசங்க’ என்கிற பாடலுக்கு விஜய் ஆடியிருக்கிறாராம்.

படத்தின் கதைப்படி விஜய் தமிழ்ப் பசங்க என்கிற நடனக்குழுவின் தலைவர். இந்தப் பாடல் அவர்களுடைய குழுவின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைகிறதாம். அதற்கேற்றார் போல் பாடலில் சில இடங்கள் நடன அமைப்புக்கேற்றபடி வந்திருக்க விஜய்யும் அவருடைய டீமும் நிஜமாகவே நடனம் பின்னி எடுத்துவிட்டார்களாம்.

அடுத்த மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட இருக்கிறது. படம் ஜூன் அல் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் படத்தின் மொத்த வேலைகளையும் ரீரெக்கார்டிங், டப்பிங் உட்பட முடித்துவிட்டு மே மாதத்திலிருந்து தனது அடுத்த படமான ‘ஜில்லா’வின் ஷூட்டிங்குக்குத் தயாராகிறார்.

கதையைக் கேட்கும் போது இதுவும் வழக்கமான விஜய்யின் மாசாலாப் படம் போலத் தான் தெரிகிறது. தலைப்பு வேறு ரசிகர்கள் முதன் முதலில் திரையில் விஜய்யைப் பார்க்கும் போது ஆராவாரமாக ஆர்ப்பரிக்கும் வார்த்தையான ‘தலைவா’. பின் என்ன ? மசாலாவோ மசாலாதான்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.