‘ஐ’க்காக குண்டாகி மெலிந்த விக்ரம்

vikram-emy-shankars-i

நடிகர்களை ஆளே தெரியாமால் உருமாற்றுவதில் பரதேசி பாலாவிற்குப் பின் இயக்குநர் ஷங்கரைத் தான் கில்லாடி எனச் சொல்லலாம்.

ஏதோ நாட்டு ரகசியம் போல காக்கப்படும் அவரது ஐ படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது பக்கிலீக்ஸாகி (விக்கிலீக்ஸ் மாதிரி)

மக்களின் எதிர்பார்ப்பு டெம்பரேச்சரை சுமார் 800 டிகிரி கூட்டிவிடும்.

தற்போதைய லேட்டஸ்ட் அதில் விக்ரமுக்கு இருக்கும் பல்வேறு கெட்டப்கள். படத்தின் ஒரு பாதியில் நல்ல கட்டுமஸ்தான விக்ரமாக வரும் விக்ரம், மற்ற பாதியில் எப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று படு ஒல்லியாக வருகிறாராம்.  இதில் மொட்டை போட்டிருக்கும் விக்ரமாக ஒரு கெட்டப்பும் வருகிறது. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள மொட்டை பாஸாக வந்திருந்த விக்ரமைப் பார்த்ததும் எல்லோருக்கும் சொல்லாமலே விஷயம் புரிந்து போனது.

விக்ரமுக்கு எத்தனை கெட்டப் என்று ஊகிக்க முடிந்தாலும் கதை மட்டும் பக்கிலீக்ஸாகவில்லை இது வரை.  அது சரிங்க சங்கர் சார் விக்ரமைப் போட்டு இப்படித் துவை துவைன்னு துவைத்துக் காயப் போடுறீங்களே பக்கத்துல நிற்கிற எமி ஜாக்சனை மட்டும் ப்ரிட்ஜீக்குள் இருக்கிற ஆப்பிள் மாதிரி அப்படியே வெச்சிருக்கீங்களே. இது ரொம்ப ரொம்ப அனியாயம் சார்.

ஐக்குப் பிறகு அடுத்த படத்தில் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறவர் தனுஷ்ஷாம். தனுஷ்ஷை நீங்கள் எவ்வளவு குண்டாக, அல்லது இப்போதிருப்பதை விட எவ்வளவு ஒல்லியாக மாற்றினாலும் எந்த மாற்றமும் கண்ணுலயே தெரியாதே ஷங்கர் சார். என்ன பண்ணப் போறீங்களோ?