ஹாரிஸ்ஸின் இசையில் வரவிருக்கும் ‘யான்’

yaan-music-harris-starts-newyork-april4

ஒளிப்பதிவாளராயிருந்து வெற்றிகரமான இயக்குனரான கே.வி.ஆனந்தின் வரிசையில் அடுத்து இயக்குனராகிவிட களமிறங்கியிருப்பவர் ரவி.கே.சந்திரன். தமிழ் மற்றும் மலையாளத்தின் பெரும் இயக்குனர்களின் கேமிராமேனாக இருந்துவிட்டு இப்போது எல்ரெட் குமாரின் தயாரிப்பில் ‘யான்’ எனும் படத்தை இயக்குகிறார்.

தானே சிறந்த ஒளிப்பதிவாளராயிருந்தும் இவருடைய படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய மனுஷ் நந்தன் எனும் இளைஞரை அமர்த்தியிருக்கிறார். ஜீவா, துளசி நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிஸ்ஸூக்கு ‘கோ’வுக்குப் பின் பெரிய அளவில் பாடல்கள் எதுவும் ஹிட்டாகாத நிலையில் இப்படத்தில் ரவி.கே.யுடனான கூட்டணி நல்ல பாடல்களை வெளிக்கொண்டு வரும் என்று நம்புகிறார்.

இதற்காக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஹாரிஸ் மூவரும் நியூயார்க் பறந்துள்ளனர்.  ஏப்ரல் 4ஆம் தேதி நியூயார்க்கில் ஆரம்பித்து 5 நாட்கள் நடக்கும் பாடல் கம்போசிங்கில் அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர்களையும் இணைக்க இருக்கிறாராம் ஹார்ரீஸ்.

இதற்குப் பின் தொடரும் கம்போசிங் பிரபல சொகுசுக் கப்பலான க்ரூஸ் கப்பலில், புளோரிடாவில் ஆரம்பித்து ஹைதி, ஜமைக்கா, மெக்சிகோ எனக் கடலிலேயே சுற்றி புளோரிடா திரும்பும் 8 நாட்கள் பயணத்தோடு சேர்ந்து நிறைவு பெறுமாம்.

“என்ன சார் கிட்டாரை எடுத்துகிட்டு யார்கிட்டே பாட்டு கத்துக்கிட கிளம்பிட்டீங்க ? இசையமைப்பாளாராகி ஜாலியா அமெரிக்கா சுத்திப் பாக்க ஆசை வந்துடுச்சா உங்களுக்கு?”