சுப்ரமணியபுரம் சுவாதி பண்ணும் அமளி துமளி.

subramanyapuram-swathi-reentry-tamil-telugu-malayalam

2008ல் வெளியான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் தமிழே தெரியாவிட்டாலும் பக்கா மதுரைப் பொண்ணு போல அழகாக நடித்திருந்தார் சுவாதி. படத்தில் கடைசியில் எல்லோரும் வெறுக்கும்படியான கேரக்டர் அமைந்ததாலோ என்னவோ அதற்குப் பின் தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புக்கள் கிடைத்துவிடவில்லை. தெலுங்குப் பொண்ணான அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. 

சில வருடங்களுக்குப் பின் சமீபத்தில் தெலுங்கில் முதன்முதலில் இவர் நடித்து வெளிவந்த ‘சுவாமி ரா.ரா’ என்கிற படம் வெளியாகியதும் படு ஹிட்டானது. அதே போல் மலையாளத்தில் இவரது முதல் படமான ‘ஆமென்’னும் ரிலீஸாகி ஹிட்டாகிவிடவே திடீரென்று படு பிஸியான நடிகையாக ஆகிவிட்டார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் படவாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன. தற்போது லண்டன் ப்ரிட்ஜ் என்கிற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். மற்றுமொரு மலையாளப் படத்தில் வெளிநாட்டில் பெரும்பாலும் கதை நடக்கும்படியான படத்தில் நடிக்கக் கேட்டுள்ளார்கள். மற்ற படங்களுக்கு கால்ஷீட் பாதிக்கக் கூடாதே என்று யோசித்து வருகிறாராம்.

தெலுங்கில் புதிய படங்கள் சில பேச்சுவார்த்தையில் இருக்கின்ற நிலையில், தமிழில் அதியமானின் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘அமளி துமளி’ படத்திலும், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திலும் நடித்து வருகிறார்.

நல்ல கதையுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறாராம் நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு போலவே எளிமையான அழகாக இருக்கும் சுவாதி. மார்க்கெட் சூடாயிடுச்சுன்னா நீங்க நெனச்சமாதிரி நல்ல கதையெல்லாம் பாக்கமுடியாதே மேடம்.