ajith53-new-film-teaser

கடந்த மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினமும் மற்றும் நடிகர் தல அஜீத்தின் பிறந்த தினமும் ஆகும். அந்த வகையில் ரசிகர்களை மே தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் உழைப்பாளர்களாக மாறச்செய்யும் தலயின் இந்தப் பிறந்த நாளையொட்டி அவரது பெயரிடப்படாத புது

படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

அஜீத் 53 என்று பெயரிடப்பட்ட இந்த டீஸர் யூட்யூபில் வெளியிடப்பட்ட 3வது நாளிலேயே சுமார் 8 லட்சம் பேருக்கு மேல் பார்த்து முடித்து விட்டனர். இந்தியாவிலேயே தற்போது அதிகம் பார்க்கப்பட்ட அதிகம் ஷேர் செய்யப்பட்ட வீடியோவாக இது இருக்கிறது. இதில் அஜீத்துடன் இணைந்து தோன்றுகிறார் ஆர்யா.

சக்ரி டோலட்டி சொதப்பிய அஜீத்தின் தோல்விப்படமான பில்லா -2 வின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டபோது 5லட்சம் ஹிட் தான் ஆனது. அதை முறியடித்திருக்கிறது அஜீத் 53. படத்திற்கு இசையமைக்கும் யுவன் இந்தட் டீஸருக்கும் இசையமைத்திருக்கிறார்.

பட்டியல், பில்லா-1 போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்த்தனின் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் டாப்ஸி, மகேஷ் மஞ்ச்ரேகர், அதுல் குல்கர்னி, சுமன் ரங்கநாதன், கிஷோர், அக்ஷரா கௌடா போன்ற பலரும் நடிக்கும் இப்படம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீஸரை இங்கே யூட்யூபில் காணுங்கள்..

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.