அமலா போலிருக்கிறாராம் ஹெப்பா

heppa-jai-thirumanam-ennum-nikkahஆஸ்கார் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது. லோகநாதனின் ஒளிபதிவு , புது முக இயக்குனர் அனீசின் கதை , திரை கதை அமைப்பு; கிப்ரானின் அறிமுக இசை ; வனிதா ஸ்ரீனிவாசனின் ஆடை அலங்காரம்; 

எல்லோராலும் ரசிக்கப்படும் மிடில் க்ளாஸ் கதாநாயகனாக  ஜெய், இரண்டு அழகான கதாநாயகிகள் நசிரியா ,மற்றும் மும்பாய் மாடல் ஹெப்பா படேல் ஆகியோருடன் நடிக்கிறார்.

காட்சி அமைப்புக்காக  தயாரிப்பாளர் அறிமுக இயக்குனர்தானே என்று யோசிக்காமல் மனமுவந்து பணம் செலவிட்டுள்ளார்.  ஒளிப்பதிவாளர் லோகநாதனின் காட்சி அழகியல் அவருடைய முந்தைய வெற்றிப் படமான உஸ்தாத் ஹோட்டலில் தெரியும். நல்ல கதை அம்சம், நல்ல இயக்கம் , செவி குளிரும் இசையுடன் வெவ்வேறு மதத்தைச் சார்ந்த இருவரின் திருமணத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது இப்படம். காதல் என்றாலும் மதம் என்றாலும் சம்பந்தப்பட்டவர்களின் சரியான புரிதல்களே அவற்றின் இணைப்பின் வெற்றி தோல்விகளுக்குக் காரணம் என்பதை படம் லேசான நகைச்சுவை கலந்து முன்வைக்கிறது.

இப்படத்திற்காக ஜெய் – ஹெப்பா சம்பத்தப்பட்ட பாடல் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. புது நாயகி ஹெப்பா வேதம் புதிது காலத்து அமலாவின் சில பாவனைகளை நமக்கு நினைவுபடுத்துகிறார் என்கிறார் இயக்குனர் அனீஸ்.