வொய்ப்தான்டா.. லைப் – குட்டிப்புலியின் புது தத்துவம்

kutti-puli-sasikumar-film-news

ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்கிற ஒரு பிரபல புள்ளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் குட்டிப்புலி. வாகை சூடவா படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படம் இது. படத்தின் நாயகராக நடிப்பவர் சசிகுமார். இதற்காக ஒரு

சிறிய தொகையையே சற்குணம் அட்வான்ஸாக கொடுக்க அதைப் பேசாமல் சம்பளாமாக வாங்கிக் கொண்டாராம் சசி.

இப்படத்தில் கம்பு சுழற்றும் வீரராக நடிக்கும் சசிகுமார் அதற்காக ராஜபாளையத்தில் ஒரு பிரபல கம்பு சுழற்றும் வீரரிடம் நிஜமாகவே இரண்டு மாதங்கள் சிலம்பம் கற்றுக் கொண்டாராம். படத்தில் நாயகி லெட்சுமி மேனனோடு சகஜமான காட்சிகள் இல்லாததால் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் வேண்டுமென்றே லட்சுமி மேனனோடு பேசாமலே இருந்தாராம் சசி.

படம் முழுவதும் வேட்டி கைலியில் வரும் சசிகுமார் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பேண்ட்-ஷர்ட் அணிந்து வருவாராம். தியேட்டரே கலகலக்கும் காட்சியாம் அது. குட்டிப்புலி க்ளைமாக்ஸ் வழக்கம் போல ஹீரோ சார்பாக இல்லாமல் சரண்யாவுக்கு முக்கியத்துவம் தரும்படி வித்தியாசமாக அமைந்துள்ளதாம். படத்தை முடித்தவுடன் தனது சார்பாக பாலாவுக்கு மட்டும் போட்டுக்காட்டினாராம். படத்தைப் பார்த்துவிட்டு பாலா கண்கலங்கிப் பாராட்டினாராம்.

இப்படத்தில் சசிகுமார் அடிக்கடி சொல்லும் பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா ? தலைப்பை மீண்டும் படியுங்கள்.