master-suresh-in-my-dear-kuttichathanமௌன கீதங்கள் படத்தில் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு ஜூனியர் பாக்யராஜாக கலக்கிய மாஸ்டர் சுரேஷ் சூர்யகிரண் என்கிற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவர் தமிழின் முதல் 3-டி படமான மைடியர் குட்டிச்சாத்தானில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவனாக நடித்தவர் இவர். ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மனிதன் என பதினைந்து படங்களில் சிறு வயது ரஜினியாக நடித்திருக்கிறார். அதே போல கமலஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சிரஞ்சீவி, மிதுன் சக்கரவர்த்தி போன்ற நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் சுமார் 216 படங்களில் சிறுவனாக நடித்து புகழ் பெற்றவர். கேரளா அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது இரு முறையும், மத்திய அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது இரு முறையும் பெற்றவர். தெலுங்கில் ஐந்து வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார்.

இவர் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘கவிதா முதல் கல்பனா வரை’. என்று பெயர் வைத்துள்ளனர். இவருக்கு ஜோடியாக பதினெட்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரைப்பட கல்லூரி மாணவரும், கமலிடம் உதவி இயக்குனராக பயிற்சி  பெற்றவருமான ரவிதேவன் கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்கும் புதிய படம் இது.
ட்ரீம் வேல்டு சினிமாஸ் சார்பில் தலைவன் பட இயக்குனர்  டி.எஸ். ரமேஷ்செல்வன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர்  இசையமைக்கிறார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, அசோக்மேத்தா படத்தொகுப்பு செய்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பதினெட்டு பெண்கள் எப்படியெல்லாம்  பயணிக்கிறார்கள், அவர்கள் மூலமாக அவனின் வாழ்க்கையில் என்ன விதமான பாதிப்புகள் உண்டாகின்றன என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கலகலப்பாக சொல்கிறது இந்த படம்.  மே மாதம் முதல் நாள் பாடல் பதிவுடன் தொடங்கும் இந்த படத்தில் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.